நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை :  கு.முருகேசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பூமி தலை குளிக்க
புற்கள் தலை தூக்க
பறவைகள் தாகம் தணிக்க
தண்ணீர் லாரிக்கு ஓய்வு கொடுக்க
தண்ணீர் குழாய்க்கு வேலை கொடுக்க
உழவன் பொன் ஏறு பூட்ட
கவிஞன் கவிதை படைக்க
குழந்தைகள் துள்ளி குதிக்க
கோடை மழையே வருவாயா?

கோடை விடுமுறைக்கு
ஊருக்கு வரும் பேரப்பிள்ளைகளை நோக்கி
காத்திருக்கும் தாத்தா பாட்டி போல
கோடை மழைக்காக காத்திருக்கிறார்கள்
மக்கள்!

அடைமழை வந்தால்
தண்ணிக்குள்  ஊர் இருக்கும்!
கோடை மழை வந்தால் தான்
ஊருக்குள் தண்ணீர் இருக்கும்!

மழைக் காலத்தில் அடைமழை வந்தால்
பள்ளிக்கு விடுமுறை விடுகிறது அரசு!
கோடை காலத்தில் கோடை மழை வராததால்
பள்ளிக்கு விடுமுறை விடுகிறது அரசு!

வானமே!
நீ ! ஒளி ஒலி அமைத்து
வழி அனுப்பி வை
கோடை மழையை!

வானத்தில் கோடை மழை
கண் திறந்தால்தான்!
பூமியில் புல்பூண்டும்
கண்திறக்கும்!

வராத விருந்தாளி வந்தால்
எங்களுக்கு மகிழ்ச்சி!
கோடை மழையே! நீ!
வராது போனால்
எங்களுக்கு அதிர்ச்சி!

கோடை மழையே!
கோடையில் உன்னை வரவேற்கவே
எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை!
நீயும் விடுமுறை எடுத்து ஏமாற்றி விடாதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.