/

மனம் என்னும் மாயப் பேய்: பொன் . குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

மனம் என்னும் மாயப் பேய்
மனிதனைப் பிடித்து ஆட்டுகிறது.
மனம் மனிதனிடம் இருந்தாலும்
மனத்திடமே மனிதன் சிக்கியுள்ளான்.
மனத்திற்கு உருவம் இல்லை.
மனத்திடமிருந்து விடுதலை இல்லை.
மனம் என்பது ஒரு குரங்கு 
மனதின் வழி செல்பவருக்கு இல்லை ஒழுங்கு.
மனதைக் கட்டுப் படுத்தும் மனிதனே
முன்னேற்றம் கண்டிட முடியும்.
மனப் பேயை மனிதன் விரட்டிட்டாலே
மனித வாழ்வும் இருளிலிருந்து விடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.