மனம் எனும் மாயப் பேய்: H ஹாஜா மொஹினுதீன்


அடங்க மறுக்கும் !
ஆட்டம் தொடங்கும் !
நிம்மதி தேடி -
நீண்ட தூற பயணமாயினும் ;
மனம் மட்டும் அடங்கவில்லை !
மாற்றம் ஒன்றும் நிகழவில்லை !
மாற்றத்தை தேடும், மகிழ்ச்சியை தொலைக்கும் !
சந்தோசமாய் இருந்தாலும், சந்தேகத்தை கிளப்பும் !
அமைதி இல்லாது அலைக்கழிக்கும் ;
ஆற்றாமையில் ஆட்களை வெறுக்கும் !
தவறை கூட சரியாய் காட்டும் !
சாத்தானை கூட சகோதரனாய் காட்டும் !
நல்லோர் பக்கம் நெருங்க மறுக்கும் !
நரிவேஷம் போடுவோரிடம் நலம் விசாரிக்கும் !
தவறு என்று தள்ளிவந்து ;
தனிமையில் இருந்தாலும் ;
தாறுமாறாய் யோசிக்கும் ;
தடம்புரள வைக்கும் !
அக்கிரமம் கண்டு ஆவேசப்படும் !
அடக்க நினைத்து அடங்கி போகும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...