பொம்மைகள்: மீனாள் தேவராஜன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

காலையிலே அப்பா தம் பணிக்குப் புறப்பட்டார்அக்காரிலே அம்மாவும் பணிக்குப் புறப்பட்டார்வீட்டிலே பணிப்பெண் உண்டு,ஊட்டி வளர்க்கஆளில்லை,பாட்டி உண்டு படுத்த படுக்கையாய்ஒரு வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்ஒரு வீட்டிற்கும் ஒரு பிள்ளைதான் வேண்டும்பகலில் பொழுதுபோக்க தொலைக்காட்சி உண்டுஅல்லில் அணைத்துத் தூங்கக்கரடிபொம்மை உண்டுதாயிடம் முட்டி முலைப்பால் குடித்ததுமில்லைதாய் பாசம்‘ங்கா ங்கா’ சொல்லித் தந்ததுமில்லைதந்தையோவாரியெடுத்து உச்சி முகர்ந்ததுமில்லைதந்தையின் அன்பும் அரவணைப்பும் அறிந்தததுமில்லைஉள்ளன்பு மரத்துப் போய் ஊதியமொன்றே செய்வார்கள்உள்ளன்பு காண எமக்குத் தரவில்லை உடன்பிறப்புகள்உற்றார்உறவினர் அன்பு மறந்து விட்டப் பெற்றோரால்ஒற்றை மரங்களாய் உள்ளமிற்றுப் போனவர்கள் நாங்கள்நவராத்திரிபொம்மைகள் பல கொலுவில் வீற்றிருக்கும்காசுபண்ணும் மனங்களில் நாங்கள் கொலு வீற்றிருப்போம்,எங்களுக்கு அவர்கள் பரிசாய்த் தருவது பேசாப்பொம்மைகளே!நாங்களும் ஒருவிதத்தில் உயிருள்ள பேசும்பொம்மைகளே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...