பொம்மைகள்: கா.ந.கல்யாணசுந்தரம்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

பார்த்த
பொம்மைகளையே
மீண்டும் மீண்டும்
பார்த்தவாறே
அலுத்துப்போன
குழந்தை
தாத்தாவின் மடிமீது
தூங்கிப்போனது!
சிதறிக்கிடந்த
பொம்மைகள்
மீண்டும்
உயிர்ப்பித்தெழ
நேரமாகும்....!
தாத்தாவும்
பொம்மைகளோடு
பொம்மையாய்
குழந்தையை
சுமந்தவாறே
தூங்கிப்போனார் !
எங்கிருந்தோ
பாடல் ஒலித்தது....
' நான் மறுபடியும்
குழந்தையாக
பிறக்க வேண்டும் - அன்னை
மடிமீது தலைவைத்து
படுக்கவேண்டும் ..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...