நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

புதையல்: கவிஞர் இளவல் ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

கணக்கின்றிக் கறுப்பாகச் சேர்த்து வைத்து       கண்மறைவாய் மற்றவர்க்குத் தெரியா வண்ணம்நினைத்திடவோர் அளவின்றிப் புதைய லாக்கி       நிறைய,பலர் அறியாத மறைவி டத்தில்தினப்போதும் பாதுகாத்த பணங்கா செல்லாம்       திடீரெனவே செல்லாதெ ன, அறி விக்கமனத்தளவில் மயக்குற்று நொந்து போனார்,      மாபெரும்பூ கம்பந்தான் வந்தாற் போல!மாதங்கள் வருடங்கள் வாழ்நா ளெல்லாம்       மற்றவரை ஏமாற்றிப் பணம்ப றித்துபூதங்கள் காத்ததுபோல் புதையல் காக்கப்        புரிந்திட்டார் பலவழியில் மாய மாக்கி.ஆதரவாய் உதவுதற்கு மனமு மின்றி       அற்பவழி யில்சேர்த்த பணந்தான் எல்லாம்வேதனையில் மாற்றவழி ஏது மின்றி       வீதியிலே வீசுகிறார் வெறுந்தா ளாக!நல்லெண்ணம் மனதுக்குப் புதைய லாகும்      நற்செயல்கள் மாந்தருக்குப் புதைய லாகும்நல்லதொரு நம்பிக்கைப் புதைய லாகும்      நாணயந்தான் நாவிற்குப் புதைய லாகும்உள்ளமதில் உற்சாகம் புதைய லாகும்     ஊக்கமொன்றே இளைஞர்க்குப் புதைய லாகும்கள்ளமில்லா உள்ளந்தான் கால மெல்லாம்      காசினியில் மனிதருக்குப் புதைய லாமே!                       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.