புதையல்: கோ.எழிலன்


ஆழமான புதையலை அள்ள
ஆசைக் கொண்டு
அடர்ந்த காட்டின் முகவாசல் சென்றேன்..!
ஆயிரம் கேள்விகள் ஏற்பட்டதாலே,
அல்லாடும் அணிலிடம்
தள்ளாடி கேட்டேன்
காட்டினில் புதையல் ஏதேனும் உண்டோ???
கொழுத்த அணிலும்
பதிலும் சொன்னது...........!!!!
விலையுயர்ந்த புதையல்
விதைகள் தானே!
மண்ணில் இட்டால்
மகத்துவம் புரியும்,
பூக்களும் , காய்களும்
கனிகளும் , பிறக்கும்
சோலையும் சிறக்கும்
உண்ணவும் கிடைக்கும்...!!
சொன்னதும் நெஞ்சில்
சொர்க்கம் தெரிந்து
சோர்ந்தே நடந்தேன்- அந்த
இடத்தினை கடந்தேன்..!!!
வழியில் முட்களை மிதித்ததனாலே
வதைப்பட்ட பாதம்
தடைப்பட்டு நின்றது,
விழிப்பட்ட இடமெங்கும்
இருள் சூழ்ந்திருக்க
இடையிலே வந்தது
இசை மீட்டும் கருங்குயில்,
புதையலின் இருப்பை விவரம் கேட்டேன்
குயிலும் இசையினில்
இடத்தினை சொன்னது,
மனிதர்கள் சேர்ந்து
மரத்தினை வெட்டி
விழுந்த புதையல்
வழியினில் பார்த்தேன்
காடுகள் தானே
இந்நாட்டின் புதையல்
காடுகள் விழுந்தால்
ஏது? புதையல்??
...என்று சொல்லி பறந்து
பறந்தது குயிலும்...!!!
புதையலை அறிந்தேன்
புகலிடம் புகுந்தேன்..!
வீட்டிற்கு அருகே
விதைகளையிட்டேன்
செடிகளும் , மரங்களும்
காய், கனிகளை தந்தது,
அணிலும் வந்தது
குயிலும் கண்டது
புதையலை பார்த்தே,
புகலிடம் சென்றது...!!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...