பணத்தின் மறுபக்கம்: - கோ. மன்றவாணன்


பணத்தாளின்
ஒரு பக்கத்தில்
புன்னகைக்கிறார் காந்தி ;
மறுபக்கத்தில்
மறைந்திருந்து புன்னகைக்கிறார்கள்
கொடூரர்கள் !
பணத்தின்
பயனால்
ஓர் உயிரைக் காக்க முடியும் ;
பணத்தின் மறுபக்க பயங்கரத்தால்
ஓர் உயிரைப் பறிக்க முடியும் !
சுடுகாட்டுப் பிணம்கூட
எழுந்துவந்துஓட்டு
போடும்
பணநாயகத்தில் ;
சேவைகளையே
சேர்த்து வைத்த
ஏழைத் தலைவர்
தோற்றுப் போவார்
சனநாயகத்தில் !
தேவைக்கேற்ற பணம்
கண்ணீர் துடைக்கும்
நண்பரைப் போல் ;
அளவு கடந்த பணம்
மயக்கிக் கெடுக்கும்
ஆற்றோர அழகிகள்போல் !
தேசச்தைப்
புற்றுநோயாய் அரிக்கிறது
கறுப்புப்பணம் ;
வெள்ளைமனம்
வேண்டும்
ஒவ்வொரு இந்தியனுக்கும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...