மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பணத்தின் மறுபக்கம்: முனைவர் சி. அருள் ஜோசப் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பணத்தினது ஒருபக்கம் உழைப்பு நேர்மை    பளிச்சிடுமே மறு பக்கம் ஊழல் லஞ்சம்குணம் மாறும் பணம் வந்தால், பெருகும் குற்றம்   குதூகலம்தான் நிறைந்தாளும், விலகும் சுற்றம்மணம்வீசும்  பணம் போகும் கொள்ளை; நித்தம்   மரணம்வந் தேவாழ்தல்  அவரின் சித்தம்!கோணலாகும் செயல்தருமே கருப்புப் பணம்,   கோடிகோடி யாய்தினம் சேர்த்த பணம்!வாழ்வதற்கே பணம்தேவை !  பணமேதான் நல்   வாழ்க்கையாக பதுக்கிவைப்பர் இடமே தேடிபாழ்மனதால் பணச்சுற்று முடங்கும் ஓடி   பகட்டாக வாழ்ந்தபனம்  உழைப்பிழந்துதாழிட்டு முடிக்கும் தன் வாழ்வை ! கைது   தான்செய்வார் பெருந்தொகையை! கணக்கில் காட்டாவீழ்தொகையை கடன்ஈந்தே  வட்டி சேர்ப்பார் !   வீழ்ச்சியுற்ற பங்குவாங்கி நட்டம் என்றே,தன் கணக்கில் வரவு வைப்பார் ! இழப்பார் தூக்கம்   தன்பணத்தைக் காப்தற்கே வகுப்பார் திட்டம்முன்பணமாய் பலகோடி கொடுத்து வைப்பார்   முடிந்தபோது தருவதற்கே வழிகள் சொல்வார்.நன்கறிவார் , தன்செயலால்  பொருளாதாரம்   நலிவுருதல்! வரிஏய்ப்பும்  செய்வார்! என்றும்  தன்நலத்தால் பிறர்நலத்தை மறுப்பார்! மறப்பார் !!   தன்பக்கம் பணம்வரவே  பிணமும் ஆவார் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.