மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பணத்தின் மறுபக்கம்: கு.முருகேசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பணமே!நீ  இல்லாத போதுமனிதன் பணம் சேர்க்கிறான்.நீ  அதிகமானால்மனிதன் பலம் சேர்க்கிறான்.அளவோடு பணம் இருந்தால்அவசியமானதை வாங்குகிறான்!அளவுக்கு அதிகமாக பணம் இருந்தால்ஆடம்பரத்தை வாங்குகிறான்!பணமே!பணம் உள்ளவன்பணம் கொடுத்தால் எதையும் வாங்கலாம்!பணம் இல்லாதவன்எதைக் கொடுத்து பணத்தை வாங்கலாம்!பணமே!நீ தொழிலாளியை முதலாளியக்குகிறாய்!ஏழையைப் பணக்காரணாக்குகிறாய்!நீ பக்கமிருந்து ஆட்டி வைக்கிறாய்!நீ விலகிச் சென்று அடக்கி வைக்கிறாய்!பணமே!பணக்காரர்களுக்கு பக்கமிருந்தேபணிவிடை செய்கிறாய்!ஏழைகளை எதிர்த்து நின்றேஏங்க வைக்கிறாய்!பணமே!முதலாளிக்கு முதலாகிறாய்!தொழிலாளிக்கு கூலியாகிறாய்!பணக்காரனுக்கு ‘கார்’ ஆகிறாய்!ஏழைக்கு ‘கால்’  ஆகிறாய்!பணமே!நீயும் காவிரியும் ஒன்று அரசியல்வாதிகள்உன்னை விட மறுக்கிறார்கள்!  ஏழை விவசாயிகள் பக்கம்நீ வர மறுக்கிறாய்!பணமே!உழைப்பைக் கொடுத்துபணத்தை பெருபவனைதொழிலாளி என்கிறோம்!பணத்தைக் கொடுத்துஉழைப்பைப் பெருபவனைமுதலாளி என்கிறோம்!பணமே!ஒரு பக்கம் நீ இல்லாமல்வாழ்க்கை கருப்பாய் இருக்கிறது!மறுபக்கம் நீயே கருப்பாய் இருக்கிறாய்!பணமே!செல்லும்போதெல்லாம் செல்லாத நீசெல்லாத போது செல்கிறாய்வங்கிகளுக்கு!பணமே!அராஜகமாக சேர்த்தவனிடமிருந்துஅபராதமாக விட்டுச் செல்கிறாய்!நீ ! யாருடன் கூட்டணி வைக்கிறாயோ!அவனே! பணக்காரனாகிறான்.உன் ஆதரவு கிடைக்காதவனே!ஏழையாகிறான்.ஓ மனிதா!நீதான்! என்னை அச்சடிக்கிறாய்!அரவணைக்கிறாய்!நான் உன்னோடு உள்ளபோதெல்லாம்நீ காண்பது என் மறுபக்கம் அல்லஉன் மறுபக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.