பணத்தின் மறு பக்கம்: லூர்து எஸ் ராஜ்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

உணவுக்கும் உடைக்கும் உயரிய தானத்துக்கும் பயனான பணமேகொலைக்கும் களவுக்கும் கூலியாகி இன்று மாசுபட, கருப்புவெள்ளை ஹவாலா கள்ளப் பணமாகி வெள்ளமாய் ஓடியும்உள்ளபடியே பணத்தை தேடாதார் உலகில் யாருளர்?ஆழ்மனம் மேல்மனமென உள்ளத்தில் பள்ளமுண்டு;புழங்கிடும்பாழ்பணம் என்னும் தாளுக்கும் இரண்டு பக்கமுண்டு;இரக்கமும் கருனையும் மனதிலுண்டு ; பணத்துக்கு என்னவுண்டு?அரக்க உள்ளமும் ஆதிக்க எண்ணமுமே இங்குபல செல்வரிடம் உண்டு.கொடுப்பவர் கொள்பவரை பிரித்து வைக்கும் பணத்தின்கொடுமைதான் ஏழை பணக்காரன் என்னும் பிளவுகள்பண்டைக் காலத்தின் பண்டமாற்று முறையினால் இத்தனைமண்டைக் கர்வம் வந்ததில்லை எவர்க்கும் பணத்தைப் போல.செல்லாத பணமான ஐந்நூறு ஆயிரத்தால் பொருளாதாரம்செழிக்கும் தொழிலும் நின்று போச்சு ; நிதமும் செய்திட்டபல்வகை வேலையும் போயிற்று; மக்களும் நாள்தோறும் வங்கியின்முன்னாலே கால்கடுக்க நின்றாயிற்று; சில உயிரும் மாண்டாயிற்று.செல்லாத பணத்தை சேகரித்த ரிசெர்வ் வங்கியும் பிளைவுட்டென்னும்செயற்கைப் பலகையாய் செய்யப் போகிறதாம்;ஐநூறும் ஆயிரமும்கூழாகி கெட்டியாகி பாழாகப் போகிறதாம் ; பணமேயுந்தன்கொட்டம் அடங்கிற்றா ? கொடிய கோலோச்சல் போயிற்றா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...