மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பணத்தின் அழகூர். அருண். ஞானசேகரன்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பணமதனின்  மறுபக்கம்  பாவிகளின்  பிறப்பிடமாம்குணங்கெட்டோர்  தம்முடனும்  குலவிடுமாம்! --பிணக்கேற்கஅதுவேதான்  காரணமென்  றாகிடுமாம், வேண்டாமென ஒதுக்கிடுவோர்  எவரோயிவ்  உலகில் ?மணமில்லை , எனினும்வாழ்வை  மணக்கசெயும் , நம்முடனேஇணக்கமுற  எதுவொன்றும்  எளிதாகும் !--பணமதனைவேண்டாதோர்  உண்டாமோ  வேந்தர்முதல்  ஆண்டிவரை,மாண்புக்கும்  இணைவுண்டா  மா?பணமென்னும்  மாயப்பேய்  பாவியுடனும்  கைகோர்க்கும்,கணப்பொழுதில்  நமைவிட்டுக்  கைமாறும்!--பிணமதனின்வாயதனைப்  பிளக்கவைக்கும் , வக்கிரர்கள்  கோட்டைபுகநேயமதை  மறக்குமதன்  நெஞ்சு!நயம்மிக்கோர்  கைபுக  நலஞ்செய்யும்,  நாம்கண்டுவியக்கின்ற  வகையிலூர்  விளக்கமுறும்!--கயவர்தம்கோட்டைபுக  அதைவிடக்  கொடுமையதும்  வேறில்லை,நாட்டையே  அழிக்குமென்றும்  நம்பு!பணமதனின்  மறுபக்கம்  பழிபாவம்  என்றாகும்,குணங்கெடச்  செய்வததன்  குலத்தொழிலாம்!--மனமதனை,திரித்திடும்  அதுதன்னின்  திறதனை  வெல்லத்தான்நெறியாளன்  என்றாவாய்  நீ!கொல்லும்பேய்  தனைவிஞ்சிக்  கொடுமைதனை  செய்யுமதுவெல்லுமாம்  எவரையுமே  விரைவாக!-- நல்லதொருதொண்டனும்  அன்னதுவே, துடுக்கான  முதலாளி;இன்னதனை  மறுப்பவரும்  யார்?                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.