மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

05.01.1971: உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற தினம் இன்று!

ஜனவரி 5: 1971 ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்போர்னில் நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

DIN

ஜனவரி 5: 1971 ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்போர்னில் நடைபெற்றது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 1971-ல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் மேட்ச் ஒன்றில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு போட்டி நடைபெற வில்லை. காரணம் மழை கொட் டித் தீர்த்தது. ‘‘இனி இந்தப் போட்டி நடக்காது’’ என்று அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றம் அளவு கடந்ததாக இருந்தது. சும்மா பேருக்கு ஒரே நாளில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தலாமா என்று யோசித்தார்கள். நாலாவது நாள் நல்லவேளையாக வருண பகவான் பார்வையாளராக வரவில்லை.

ஒவ்வொரு அணியும் 40 ஓவர்கள் பந்து வீசின. இறுதியில் ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.