/

17.04.1756: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று

தீரன் சின்னமலை தமிழகத்திலிருந்து செயல்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

DIN

தீரன் சின்னமலை தமிழகத்திலிருந்து செயல்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் ஆங்கிலேயே கம்பெனி ஆட்சியை எதிர்த்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலை என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டவர்.

இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தார். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர். தாயார் பெயர் பெரியாத்தா இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.