திணறும் தி.நகர் பேருந்து நிலையம்!
போதிய இடமின்மையால் தியாகராயநகர் மாநகரப் பேருந்து நிலையம் நாள்தோறும் திணறி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் பேருந்துகள் உள்ளே சென்று வருவதற்கு சில நேரங்களில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகிறது.










