/

20-ம் நூற்றாண்டின் வசீகர மொழி

அதன் வளர்ச்சி நம் கையிலிருக்கிறது. மனித சமுதாயத்தை வளர்க்கவும், உயர்த்தவும் அதைப் பயன்படுத்த வேண்டும்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

உமா ஷக்தி.

சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டின் வயிற்றில் பிறந்த ஒரு புது மொழி.

அதன் வளர்ச்சி நம் கையிலிருக்கிறது. மனித சமுதாயத்தை வளர்க்கவும், உயர்த்தவும் அதைப் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கலையும் முதலில் கலையாகத் தொடங்கிப் பின்பு வியாபாரமாக மாறுவதுதான் வழக்கம். ஆனால் அதிர்ஷடவசமாகவோ, துரதிர்ஷடவசமாகவோ இந்திய சினிமா என்பது பிறக்கும் போதே வியாபராமகா விஸ்வரூபம் எடுத்துவிட்டது.

முதல் தலைமுறையைச் சேர்ந்த சினிமாக் கலைஞர்கள் காலம் முடிந்துவிட்டது. இரண்டாவது தலைமுறையச் சேர்ந்த கலைஞர்கள் காலத்தில் வியாபார வியாபகம் அதிகமாக உள்ளது.

பிலிம் இன்ஸ்டிடியூட்டுகளில் உருவாகும் மூன்றாம் தலைமுறைக் கலைஞர்களையாவது அதைக் கலையாக வளர்க்கும்படி தயாரிக்க வேண்டும். ஒரு கலை வியாபாரமாகக் கூடாது என்பதில்லை. ஆனால் வியாபரமே ஒரு கலையாகிவிடக் கூடாது. கலைத் தன்மையே மறையும்படியான அசுர வியாபாரமாகவும் அது ஆகிவிடக் கூடாது.

விஞ்ஞான வளர்ச்சியின் முக்கிய நூற்றாண்டாகிய இன்று மானிட சமுதாயத்துக்குக் கிடைத்துள்ள, மிக லகுவாகப் புரிகிற ஒரு புதுமொழி சினிமா. உலகம் முழுதும் புரிகிற ஒரு மொழி அது. இந்த மொழியில் எடுக்கப்படும் சினிமா என்பது தவிரச் சினிமா என்பதே ஒரு நவீன வசீகர மொழிவகை என்பதைப் பயன்படும் விதத்தில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் நிரூபிக்க வேண்டியது அவசியம். 8-வது சர்வதேச திரைப்பட விழா இந்த உத்வேகத்தை இந்தியத் திரைப்பட உலகில் ஏற்படுத்த வேண்டும். அதற்கான கலைத் தூண்டுதல்கள் இப்பட விழாக்களிலிருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.