சிவாஜிராவ் To ரஜினிகாந்த்
‘அற்ப விசுவாசியே, உனக்குக் கடுகு அளவேனும் விசுவாசம், நம்பிக்கை இருந்தால், அந்த மலையைப்பார்த்து


நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இல்லாதவன் லைஃப் ஜீரோதான்.
இது இரண்டுமே ஜீரோவுக்கு முன்னால் ஆரம்பிக்கிற நெம்பர்ஸ்.
நம்பிக்கை கடவுள் பேரிலும் இருக்கலாம், தகுந்தவர் பேரிலும் இருக்கலாம்.
‘அற்ப விசுவாசியே, உனக்குக் கடுகு அளவேனும் விசுவாசம், நம்பிக்கை இருந்தால், அந்த மலையைப்பார்த்து அப்பால் போ என்று சொன்னால் அது விலகிப் போய்விடும்’ என்று பைபிளில் ஒரு டயலாக் இருக்கிறதாச் சொல்வார்கள்.
பாரதத்திலேயே எடுத்துக் கொள்ளுங்களேன், தருமன் எல்லாவற்றையும், எல்லாரையும் கேம்ப்ளிங்கில் தோற்றவுடன் அவர்களை அவமானப்படுத்தவும், திரெளபதை பேரிலே உள்ள கோபத்துக்குப் பழிவாங்கிக் கொள்வதற்கும் அவளைப் பல பேருக்கு மத்தியிலே சபையிலே நிற்க வச்சு, புடவையை உரியச் சொல்கிறான் துரியோதனன்; துச்சாதனன் அதைச் செய்றான்; அப்போ திரெளபதை துரியோதனனைத் திட்டுற, குமுறுறா… கத்துறா… அலறுறா… பிரயோஜனம் இல்லே. அப்புறம் ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று கூவுறா…கண்ணீர் விட்டு ஓலமிடுறா…..!
அவள் உடம்பிலே கடைசியா ஒரு பிட் துணிதான் பாக்கி. அந்தக் கடைசி நேரத்திலேதான் கிருஷ்ணனோட கடாட்சத்தாலே புடவை வளரத் தொடங்குது.
திரெளபதை ரியலி முக்கால் நிர்வாணமான பொசிஷனிலே இருந்தபோதுதான் அவளுக்குக் கிருஷ்ணனோட உதவி கிடைக்குது. இந்த உதவியை அவளுக்கு அவன் ஆரம்பத்திலேயே செய்திருக்கக் கூடாதா? தாமதம் செய்வதற்கு அவசியமே இல்லையே! அவ்வளவு நேரம் அவளுடைய அலங்கோலத்தைச் சபையிலே இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கவா கிருஷ்ணன் காத்திருந்தான்?
-இப்படிப்பட்ட கொஸ்டியன்களுக்கான ஆன்சரிலேதான் நம்பிக்கை என்கிறதுக்கே ஒரு ஃபுல் ஃபிகர் கிடைக்குது.
திரெளபதை ஆரம்பத்திலேயே ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று அழுது கூப்பிட்டாலும் அவள் முக்கால் நிர்வாணமாகிறவரை தன்னோட மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவளும் போராடுறா, தன் கைகளாலே புடவையை உரிய விடாதபடி முடிந்த மட்டும் தருக்கிறா; தன் காரியம் மிஞ்சிப் போனவுடனே தன்னாலே தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிந்தவுடனே, தன்னோட முயற்சியை விட்டுட்டு, இரு கைகளையும் தூக்கி விரித்து, ‘கிருஷ்ணா’ என்று கூப்பிடுறா. புடவை வளரத் துவங்குது. இழுத்துப் பிடிக்கிறவரை கடவுள் பேரிலே அரைகுறை நம்பிக்கை. கிருஷ்ணன் வரவே – கையை விரிச்சவுடனே முழு நம்பிக்கை. அப்படியே தன்னை ஒப்படைச்சிடுறா. அவ்வளவு நேரம் வராத கிருஷ்ணன் வந்துவிட்டான்!
இந்த நம்பிக்கைக் கதையை அம்மா சொல்ல, ராமகிருஷ்ணா மெஷன் ஸ்கூலிலே விளக்கம் சொல்ல சிவாஜிராவ் கேட்டிருக்கான்.
இன்ஸ்டிடியூட்டிலே படிக்கறப்போ முதன் முதல்லே பாலசந்தரோடு தன்னம்பிக்கையோட கை குலுக்கினான் சிவாஜிராவ். அவரை கலாகேந்திரா கம்பெனியிலே சந்திச்சப்போ நம்பிக்கையோடவே இருந்தான்.
ஒருசமயம் அந்த நம்பிக்கை குறஞ்சப்போ பெங்களூருக்கே புறப்பட்டுட்டான். அங்கே பஸ் கண்டக்டர் உத்யோகத்திலே இருந்து சிவாஜிராவ் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தான்.
சிவாஜியிடமிருந்த அவநம்பிக்கைக்குரிய நேரத்தை ரவுண்ட் பண்ணினா அது அந்த நேரம்தான்!
பாலசந்தராலே மறுபடியும் அழைக்கப்பட்டப்போ செத்துப் போன நம்பிக்கை மறுஜென்மம் எடுத்தது.
அவர் அவனை நடித்துக் காட்டச் சொன்னப்போ, கிரீஷ் கர்னாட், ஃபேமஸ் கன்னட ஆத்தர், அவர் எழுதிய ‘துக்ளக்’கிலே இருந்து ஒரு பார்ட்டை, ஐ திங்க்…அது கேப்பிடலை துக்கள் மாற்றச் சொல்ற டயலாக்கா இருக்கும்….பேசி நடிச்சான். அதுதான் சிவாஜியோட தலையெழுத்தையே மாற்றியது.
இதற்கெல்லாம் சிவாஜிராவுக்கு கெய்டா இருப்பது கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான். தீஸ் ஆர் தி தாரக மந்தராஸ் இன் ஹிஸ் லைஃப்….
இவைகளின் மூலமாகத்தான் அவன் பாலசந்தரைக் கண்டான். அடைந்தான் என்கிறதும் சிவாஜிராவோட ஃபெத்.
ஒரு சின்ன ஸ்டோரி நினைவுக்கு வருது.
கடவுள் ஒரு சமயம் தன்னோட பாலசிலே நல்ல குணங்களைக் கொண்ட தேவதைகளை மட்டும் இன்வைட் பண்ணி ஒரு பார்ட்டி கொடுத்தாராம்.
வந்திருந்த தேவதைகள் எல்லாரும் ஒருவருக்கொருவர் குளோசா பழகிப் பேசி சந்தோஷமா இருந்தாங்களாம். ஆனா ரெண்டே ரெண்டு தேவதைகள் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் கண்டுக்கவே இல்லை. ஒதுங்கி இருந்தாங்க. இதைக் கவனித்த கடவுள் ரெண்டு பேரையும் அழைத்து, ‘இவளைத் தெரியாதா உனக்கு? இவள் தான் தரும தேவதை’ன்னு ஒருத்தியை இண்ட்ரோடீஸ் பண்ணிட்டு, இன்னொருத்தியைக் காட்டி, ‘இவதான் நன்றி தேவதை’ன்னு சொன்னாராம்.
அதாவது தருமத்துக்கும் நன்றிக்கும் சம்பந்தமே இருக்காது. அதைக் கடவுள்தான் பண்ணி வைக்கணும் என்கிறது இந்த அருமையான ஸ்டோரியோட தீம்!
கிரேட் பாலசந்தருக்கு சிவாஜிராவ் அறிமுகமானதுகூட கடவுள் செயல்தான்!’
இதிலே தருமம் யார், நன்றி யார்? என்கிறது உங்களுக்குத் தெரியாதா என்ன?
(இன்னும் வரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...