/

உமா ஷக்தி.

கலைக்கண்ணன், மதுரை

கே : நடிகைகள் நாய் வளர்ப்பது ஏன்?

ப : நன்றி இல்லாதவர் வீடு என்று யாரும் கூற முடியாது.

**

எஸ்.பி.ராமலிங்கம், பூதம்பாடி

கே : அழகான நடிகைகளுடன் நடித்துவிட்ட சிவகுமார் ஸ்ரீதேவியுடன் மட்டும் ஏன் இன்னும் நடிக்கவில்லை?

ப : தன் கதாநாயகிகளை சிவகுமார் தீர்மானிப்பதில்லை!

**

த.சத்தியநாராயணன், அயன்புரம்

கே : திடீரென்று ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறிவிட்டால்?

ப : நீங்கள் சத்ய நாராயணி ஆகி விடுவீர்கள்! நான்……

**

வி.பி.மதுசூதனன், திருச்சி

கே : நடிகையின் கணவன் அவளிடமிருந்து எதிர்ப்பார்ப்பது என்ன?

ப : தன்னிடமும் அவள் நடிக்கக் கூடாது என்பதை!

**

மு.தமிழரசி, கரூர்

கே : இளையராஜாவைப் பற்றி ஒரே வரி?

ப : ஆர்.டி.பர்மனே பாராட்டி இருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.