சிவாஜிராவ் to ரஜினிகாந்த்
எல்லோருமே – ஃப்ரெண்ட்ஸ், நைபர்ஸ், ஃபேன்ஸ், ரிப்போர்டர்ஸ் எல்லோருமே ஒரு கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள் ரஜினியிடம்.


எல்லோருமே – ஃப்ரெண்ட்ஸ், நைபர்ஸ், ஃபேன்ஸ், ரிப்போர்டர்ஸ் எல்லோருமே ஒரு கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள் ரஜினியிடம்.
‘ஸ்டண்டுகள் நிறைந்த கமர்ஷியல் படங்களிலேயே அதிகமாக நடிக்கிறீரே?’ என்ற கொஸ்டியன்.
அதுக்கு ரஜினி என்ன செய்ய முடியும்? ஒரு ஆக்டர் எல்லாக் காரெக்டர்ஸிலேயும் நடிக்க வேண்டியதுதான்.
கிடைக்கிற படமெல்லாம் புவனா ஒரு கேள்விக்குறியாகவோ, காயத்திரியாகவோ, முள்ளும் மலருமாகவோ, ஆறிலிருந்து அறுபது வரையாகவோ கிடைக்கறதில்லை. கிடைச்சா நடிக்காமே விடப் போறதில்லை.
அதுக்காகத்தான் ஸ்டண்ட் ரஜினிக்குப் பிடிக்காதுன்னு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிடாதீங்க. ரஜினிக்கு ஸ்டண்ட் ரொம்பப் பிடிக்கும். He means acting stunt!
ரஜினி சிவாஜிராவா இருந்தப்போ, அவன் விரும்பிப் பார்த்தது ராஜ்குமார், என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள்தான். அதிலேயும் பர்ட்டிகுலரா ஸ்டண்ட் படங்கள்!
Except MGR pictures, மற்றவங்களுடைய படங்களை ஃபர்ஸ்ட் டே, அதிலேயும் ஃபர்ஸ்ட் ஷோ, ஃபர்ஸ்ட் மேனாக போய் பார்த்திடறது சிவாஜிராவோட வழக்கம்.
எம்.ஜி.ஆர் பிக்சருக்கு ஃபர்ஸ்ட் டே பேங்களூரிலே ரொம்ப கிரெளடா இருக்கும். டக்கர் அடிச்சாலும் டிக்கெட் கிடைக்காது.
So, he didn’t try to see the MGR pictures on the first two or three days. ஹஹ்ஹா…
ஸ்டண்ட் பிக்சரிலே உங்க ரஜினி நடிச்சாலும், யூசுவலா இல்லாமே ஒரு டிஃபிரண்ட் டைப்பைக் கொடுக்கத்தான் நினைக்கிறார். டைரக்டர் மகேந்திரனின் ‘ஜானி’யில் he had attempted something different….வித்தியாசமாச் செய்ய முயன்றிருந்தார்.
இது ரஜினியோட new invention. புதிய கண்டுபிடிப்புன்னு ரஜினி சொல்ல வரலே, பழசு தான்! – பட் மிக்ஸிங்!
என்.டி.ராமாராவையும் சிவாஜி கணேசனையும் மிக்ஸ் பண்ணிக் கொடுக்கிறார். That’s all!
கராத்தேயையும் குங் ஃபூ ஹூசுவையும் புரூஸ்லி மிக்ஸ் பண்ணி ஒரு நியூ மெத்தேடைக் கொடுக்கலே? Like that….! அந்த வகையிலே உங்க ரஜினியும் ஒரு புரூஸ்லீதான்! ஹஹ்ஹஹ்ஹா!
பட்….இன்னொன்று உங்க மனசிலே இருக்கணும்..
கமர்ஷியல் படங்களில் ரஜினி நடிக்கிறதுக்கான ரீஸன் only to make money!
டியர்ஸ், ‘ரஜினி உங்களைக் கேட்கிறார்….
கமர்ஷியல் பikிsசர், ஆர்ட் பிக்சர்னு ரெண்டு வகை இருக்கிறதா நீங்க நினைக்கறீங்களா?
Nothing….அப்படி யெல்லாம் ஒண்ணுமில்லே. நல்ல படம். சுமாரான படம். மட்டமான படம். That’s all! எல்லாமே கமர்ஷியல் பிக்ஸர்ஸ்தான். எல்லாருமே எண்டர்டைன்மெண்டுக்காக வருகிறார்கள். கமர்ஷியல் இல்லாத ஆர்ட் பிக்சர்ஸ் சக்ஸஸ் ஆகாது. ரியலிஸம் பெயரிலே ஸ்லோவா எதனாச்சும் காட்டிக்கிட்டிருந்தா போரடிக்கும். சத்யஜித்ரே பிசர்சைப் பாருங்க. அதை ரசிக்கறவங்க ரொம்பக் குறைவு. இல்லையா?
அதோட ரஜினியைப் பார்த்து எந்த கொஸ்டியனும் பண்ணாதீங்க. Please ask directors. டைரக்டர்களிடம் கேளுங்க. எல்லாம் டைரக்டர்கள் கையில் தான் இருக்கு? As he pleases, அவர் விருப்பப்படி நடிகனுக்கு ட்ரஸ் பண்றார், ஆடச் சொல்றார், பாடச் சொல்றார். அவர் நினைக்கிறதைச் செய்ய வேண்டியது ஒரு நடிகனோட கடமை. The actor is only a puppet….நடிகன் ஒரு பொம்மலாட்டப் பொம்மைதான்!
பட் ரஜினியைப் பொறுத்த மட்டிலும் he is confident that he can handle any role. இருந்தாலும் எந்த சூரனா இருந்தாலும் சரி. சோதாவா இருந்தாலும் சரி. ரஜினியாலே சக்சஸா நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கு. ‘ஜானி;யா நடிச்சவராலே ஒரு சோனியாகவும் நடிக்க முடியும்!
எனக்கு இந்த ரோல் தான் நடிக்க முடியும்னு சொல்றவன்….he is not an actor. சொல்லக் கூடாது. எதுக்காகவும் தன்னை தயார் பண்ணிக் கொள்ளணும். ஏற்கமுடியும் என்கிற தன்னம்பிக்கை வேணும்.
சாமுவேல் ஜான்சன் சொன்னது போல, self confidence is the first requisite of great undertakings. எந்த ஒரு பெரிய காரியத்தையும் எடுத்துக் கொள்றதுக்கு முன்னாலே முதலிலே தேவைப்படுகிறது சுய நம்பிக்கை தான்!
இந்த நேர்கோட்டிலேதான் ரஜினியோட வெற்றி, ஜீவிதம் எல்லாம் இருக்கு. குறுக்குக் கோடே கிடையாது.
அப்படி குறுக்கே ஒரு கோட்டை ரஜினி தன் மனசிலே போட்டிருந்தா,
‘நான் பைரவியோட கணவன்’னு ஆபூர்வ ராகங்களி’லே ஒரு சின்ன வில்லன் ரோலிலே பேசிக் கொண்டு ஃபீல்டுக்குள் நுழைஞ்சி, இன்னிக்கு நீங்க ‘சூப்பர் ஸ்டார்’னு சொல்ற அளவுக்கு உயர்ந்திருப்பாரா?
அந்த ஸ்தானத்தை he took it from the great Balachandrer!
எஸ். அவர் ஃப்ர்ஸ்ட்லே ரஜினியை ஆரிர்வாதம் பண்றப்போ ரஜினி ஒரு குட் ஆர்டிஸ்ட்டா வரக் கூடிய தகுதியை, தன்னிடமிருந்து எடுத்துக் கொள்ள பாலசந்தர் சொன்னார். நம்பிக்கையோட கொடுக்கப் பட்டதை நம்பிக்கையோட ரஜினியும் எடுத்துக்கிட்டார்.
(இன்னும் வரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...