காந்திஜி திரைப்படம் சிவாஜி கருத்து
மகாத்மா காந்தியின் வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரு வெளிநாட்டு திரைப்பட ஸ்தாபனம்


மகாத்மா காந்தியின் வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரு வெளிநாட்டு திரைப்பட ஸ்தாபனம் இந்திய அரசின் நிதி உதவியுடன் ஈடுபட்டிருப்பதும் மகாத்மா காந்தியைப் பார்த்திராதவர்கள், தெரியாதவர்கள் அவரைப் பற்றிப் படம் எடுக்க புகுவது பொருத்தமானது அல்ல என்று ஒரு சர்ச்சை உருவாகி இருப்பதும் தெரிந்த விஷயம்.
ரிச்சர்ட் அட்டென்பரோ தயாரிக்கும் அந்தப் படத்தில் பென் கிங்ஸ்லி, காந்திஜியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புதுடில்லியில் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது.
காந்திஜியின் வரலாற்றைப் படமாக்கும் முயற்சிகள் குறித்து சிவாஜிகணேசனிடம் கருத்துக் கேட்டதற்கு அவர் கூறியதாவது :
‘மகாத்மா காந்தியின் வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஏனென்றால் அவர் நமது நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்கி வந்த உத்தமர். ஆனால் அவர் யாருக்காக வாழ்ந்தார், எந்த கொள்கைகளுக்காக வாழ்ந்தார், என்பதையும் அவரது லட்சியக் கனவுகளையும் அவர்கள் சித்தரிக்க வேண்டும்.
மகாத்மா காந்தியை பார்த்திராதவர்கள் அவரது வாழ்க்கையைப் படமாக்கக் கூடாது என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வீரபாண்டியக் கட்டபொம்மனை நான் பார்த்ததில்லை. கட்டபொம்மனாகத் தோன்றி நடித்திருக்கிறேன். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நான் பார்த்ததில்லை. ஆனால் வ.உ.சியாக நடித்திருக்கிறேன். அந்த படத்தைப் பார்த்துவிட்டு அவரது குடும்பத்தினர் தத்ரூபம், பெரியவரையே பார்த்துவிட்டோம் என்று வியந்து பூரித்துப் போனார்கள்!’
- ராம்ஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...