

ஜுலை 11
ஏற்காட்டில் 'நெற்றிக்கண்' படபபிடிப்பு. டைரக்ட்டர் கே.பாலசந்தர் எனக்களித்த "கவுரவம்” அவர் படத்தை என்னை டைரக்ட் செய்யச் சொல்லியது. அதனைப் பெருமையாக கருதுகிறேன். டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் சிறந்த டைரக்டர் மட்டும் அல்ல . சிறந்த தயாரிப்பாளரும் ஆவார். எந்தக் குழப்பமும் இல்லாமல் நண்பர் நடராஜன் மேற்பார்வையில் இந்தப் படம் முடிந்திருக்கிறது. சில செலவுகளைக் குறைத்து நான் ‘சிக்கனம்’ செய்யப் பார்த்த பொழுது , "செலவைப் பற்றி எண்ண வேண்டாம்,. படம் சிறப்பாக வர அனைவரும் திருப்தியடைய நன்கு செலவு செய்து எடுங்கள். எனக்கு இந்த படத்தில் லாபம் வேண்டாம். சிறந்த படத்தைத் தயாரித்தது 'கவிதாலயம்' என்ற பெயரை வாங்கிக் கொடுங்கள்' என்று கூறினார்கள். அவர் எண்ணம் போல் சிறப்பாக படம் வந்திருக்கிறது. ரஜினி இரு வேடத்தில் குருவின் படத்தில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் 'மாஸ்க் ஷாட்' (இரு வேடங்களில் இரு நடிகர்களை நடிக்க வைத்து எடுத்தல்) முறையில் எப்படி எடுப்போமோ அப்படி எடுக்க நினைத்தோம். அதனால் படம் முழுவதும் தந்தையும் மகனுமாக வேடங்களை மாறி மாறிப் போடச் சொன்னோம்.சளைக்காமல் போட்டுக் கொண்டார் ரஜினி. என் கண்ணான பாபுவுக்கும் சிரமம் அதிகம். வெற்றி என்ற 'பழம்' கிடைக்கும் போது , பலன் கிடைத்ததை எண்ணிப் பெருமிதம் கொள்வோம்.
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.07.81 இதழ)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

