இந்த விஷயத்துல ஈடுபட மாட்டேன்னு பொய்யா சத்தியம் பண்ண என்னால முடியாது
என் தந்தை - கமல்ஹாசன்


சீரியஸா நான் சினிமாவுல நடிக்கப் போற விஷயம் தெரிஞ்சு மெட்ராஸ் வந்தார் அப்பா. எல்டாம்ஸ் ரோடு வீட்டு முன் ஹால்ல ரவுண்ட் டேபிள் கான்பரன்ஸ் கூடியது. ஒரு பக்கம் அப்பா, அம்மா. இன்னொரு பக்கம் பெரியண்ணா, மன்னி.என்னைக் கூப்பிட்டனுப்பினார் அப்பா. சபை நிறைஞ்சிருந்ததை பார்த்து ஒரு தயக்கத்தோடுதான் உள்ளே போனேன். புசு புசுன்னு மீசை முளைச்சு, கட்டுமஸ்தான உடம்போட, எல்லவிதத்துலயும் பூரணமான ஆம்பளையா அவர் முன்னால உக்கார்ந்தேன். என்ன விதமான கேள்வி வரும், அதுக்கு என்ன பதில் சொல்லணும்னு ஒரு விதத்துல தயாரா கூட இருந்தேன்.
'இங்க வா, இப்படி உக்காரு, எல்லா விஷயமும் நாங்க கேள்விப்பட்டோம்' என்று எல்லாரையும் ஒரு தரம் பார்த்துக் கொண்டார் அப்பா.
"நீ சினிமாவுல நடிக்கிற விஷயத்துல தீவிரமா இறங்கிட்டது பத்தி எனக்கு ஆட்சபனையில்லை. உனக்கு பிடிச்சமான ஒரு விஷ்யத்தில நீ இறங்கியிருக்க. இப்ப நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும். ஏராளமான விஷயங்களுக்கு வசதியும் வாய்ப்பும் இருக்குற இந்த துறையில புகை, மது, மாது..இந்த மூணு விஷயத்திலயும் நீ ஈடுபடுறதில்லைனு சாத்தியம் பண்ணிக் கொடுக்கணும்" என்றார் அப்பா.
அழுத்தமா ஒரு நிமிஷத்துக்கு தீவிர மவுனம் நீடிச்சது. எல்லா முகங்களும் என்னையே பாக்குறத, தலைய குனிஞ்சுக்கிட்டே என்னால உணர முடிஞ்சது. தொண்டையை கணைச்சேன்.
"அப்பா, ஸ்மோக்கிங் என் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்குற விஷயம். சினிமாவுக்கு தேவை ஏற்பட்டா தவிர அதை நான் தொட மாட்டேன். ட்ரிங்கிங் ஈஸ் பேட் .அது எனக்குத் தெரியும். அறிவை மழுங்க வைக்கிற அந்த போதையில எனக்கு நாட்டமில்ல. ஸோ..ஐ வோண்ட் ட்ரிங்க். ஐ பிராமிஸ். மூணாவது செக்ஸ். இயற்கையோட நிர்பந்தம் இது. உடல் உபாதையோட அவுட்லெட். உங்ககிட்ட பொய்யா இந்த விஷயத்துல ஈடுபட மாட்டேன்னு சத்தியம் பண்ண என்னால முடியாது. அப்படி சாத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு, நீங்க போன பிறகு புடவைய பாத்து அலைய நான் தயாராயில்லை. இது ரொம்ப இயற்கையான விஷயம். யாராலயும் செக்ஸ் இல்லாம இருக்க முடியாது. சோ..இந்த ஒரு விஷயம் தவிர நீங்க சொன்னதுக்கு நான் மனப்பூர்வமா கட்டுப்படறேன்" என்று சத்தியம் பண்ணேன்.
"பாத்தியாடி ராஜம்..உன்னோட புள்ள என்ன சொல்றேன் கேட்டுண்டியா?" னு அம்மாவை பாத்து சொன்னார் அப்பா. அவர் முகத்துல என்ன விதமான உணர்ச்சிகள் இருந்ததுன்னு தெரிஞ்சுக்க முடியல என்னால. நேருக்கு நேரா போல்டா இந்த மாதிரி அம்மா முன்னாலியே சொல்லிட்டானே அப்படின்னு வருத்தப்பட்ட மாதிரியும் தெரியல. பொய்யா சத்தியம் பண்ணிக் கொடுக்க மாட்டேன்னு முகத்துக்கு நேரா சொன்ன தைரியத்தை பாராட்டுற மாதிரியும் தெரியல.டூ பி பிராங்க் ..இன்னி வரைக்கும் அந்த நேரத்து உணர்ச்சிகள் எனக்கு தெரியல..!
பேட்டி: உத்தமன்
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.83 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...