

மதுமலர் படத்திற்காக லொகேஷன் பார்க்க ஏற்காடு போயிருந்தோம். பர்வீன்ஸ், ஒளிப்பதிவாளர் சேகர் ஆகியோர் எங்களோடு வந்திருந்தார்கள். காலையில் புறப்பட்டு நாங்கள் பிடித்தமான இடம் அமையாததால் ஏற்காடு மலைப்பகுதியையே சல்லடை போட ஆரம்பித்து விட்டோம்.
மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் கார் போய்க் கொண்டு இருந்தது. அப்போது மாலை 5 மணியிருக்கும். எங்கள் கண்களுக்கு பள்ளத்தாக்கில் கோயில் ஒன்று இருப்பது போல் தென்பட்டது. காரை நிறுத்தி விட்டு பள்ளத்தாக்கில் இறங்கி நடக்கத் தொடங்கினோம்.
அந்தக் கோயில் ரொம்ப நேரத்திற்குப் பின் தென்பட்டது. மனித நடமாட்டம் என்றால் அது நாங்களாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு அமைதி அங்கே குடி கொண்டிருந்தது.
கோயிலுக்குச் சென்றால் அதை விட அமைதி தென்பட்டது. சுற்றுப்புற சூழ்நிலையை பார்க்கும் போது மனது திகில் அடைது.
திடீரென்று மலை உச்சியில் நிறுத்தபட்டிருந்த எங்கள் கார் தானாகவே நகர ஆரம்பித்தது. ஒரே ஓட்டம்தான் எல்லாரும் உச்சிக்கு ஓடினோம். அப்பவும் கார் ட்ரைவர் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. இந்தஇடம் பேய் நடமாட்டம் உள்ள பகுதி என்று பர்வீன்ஸ் சொல்ல எங்கள் பயம் மேலும் அதிகரித்தது.
கார் அருகே சென்ற போதுதான் 'நியூட்ரல்' ஸ்லோப்பில் விட்டு விட்டார்கள் என்று தெரிய வந்தது. ஒரு வழியாக அந்த இடத்தை விட்டு தப்பித்தோம். பின்னார் விசாரித்த போது , "சனிக்கிழமைதான் அந்தக் கோயிலில் பூஜை நடக்கும், கோயிலைத் தாண்டி யாரும் போக மாட்டார்கள். நீங்கள் போனது அதிசயம் என்று சொன்னார்கள்.மறக்க முடியாத அனுபவம் இது.
பேட்டி: மு.சிவாஜி.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

