விண்ணப்பத்தில் கட்சியின் பெயர், அது அமைந்துள்ள மாநிலம், அதற்கான கடிதங்கள் அனுப்பவேண்டிய முகவரி, அதன் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் எண்ணிக்கையளவு, அவர்களில் பிரிவு இருந்தால் அந்தத் தகவல், வட்டார அலகுகள், மக்களவை அல்லது வேறு ஏதேனும் மாநில சட்டமன்றத்தில் சார்பு செய்த உறுப்பினர் உண்டா? ஆம் எனில் அது குறித்த தகவல், அந்த அமைப்பு / கட்சிக்குள் வேறுபட்ட கருத்து தோன்றினால் அதைத் தீர்க்கும் தீர்மானங்கள் (Dispute resolution) பற்றிய தகவல்கள் ஏதும், அதன் விதிகளில் பின்னாளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனில் அதைக் கொண்டு வரும் முறை பற்றிய தகவல்கள், வேறு கட்சியுடன் இணைக்கவிரும்பும் காலத்தில் அதைச் செய்ய வேண்டியமுறை குறித்த விதிகள், இணைப்பது, பிரிவது, கட்சி/அமைப்பை கலைப்பது ஆகியவை ஏறுபடுங்கால் அதைச் செய்ய வேண்டிய முறை குறித்த விதிகள் அனைத்தும். இவை போக, அந்த கட்சியின் விதிகள், விதிகளின் விவரக் குறிப்புகள், இவை எல்லாம் போக, அந்தக் கழகம்/கட்சி/அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கைகொண்டிருக்கிறது என்றும், சமூகப் பொதுவுடமை, மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றது எனவும், இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாக்க கருத்தும் கொண்டிருப்பதாக இருக்க வேண்டும்.