ஜகத்சிங்புர்: ஒடிசா மாநிலம் ஜகத்சிங்புரைச் சேர்ந்த ஒருவர், தான் கார் வாங்கியதற்கு பரிசாக 2 உருளைக் கிழங்குகளை அளித்த கார் டீலர் மீது காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
கிஃப்ட் பாக்ஸ் ஒன்றில் இரண்டு உருளைக் கிழங்குகளை வைத்து தங்களுக்கு அளித்த கொரியர் நிறுவனத்தின் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஸவர்தன், கட்டாக்கில் உள்ள ஸ்கை ஆட்டோமொபைல்ஸில் மாருதி ஆல்டோ கார் வாங்கியுள்ளார். அன்றைய தினம் கார் வாங்குபவர்களுக்கு சிறப்புப் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த போட்டியில் ஹர்ஸவர்தன் பங்கேற்று 4ஜி சாம்சங் செல்போனை பரிசாகப் பெற்றுள்ளார்.
அவரது முகவரிக்கு விரைவில் 4ஜி சாம்சங் போன் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஹர்ஸாவர்தனை தொடர்பு கொண்ட டிடீடிசி கொரியர் நிறுவனம், பரிசுப் பெட்டியை நேரடியாக அலுவலகத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பரிசுப் பெட்டியை வாங்கிய ஹர்ஸவர்தனுக்கு பேரதிர்ச்சிக் காத்திருந்தது. அந்த பெட்டியில் செல்போனுக்கு பதிலாக 2 உருளைக் கிழங்குகள் தான் இருந்தன.
இதையடுத்து, காவல்நிலையத்தில் கார் டீலர்கள் மற்றும் கொரியர் நிறுவனம் மீது ஹர்ஸவர்தன் புகார் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்.25-இல் வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 14, 16 வயதுக்குட்பட்ட வீரா்கள் தோ்வு

தருமபுரியில் வணிக வளாகங்கள் மூடல்

உத்தரமேரூா் தொகுதியில் வாக்களித்த வேட்பாளா்கள்

ஏற்காட்டில் தோ்தல் 94 சதவீதம் வாக்குப்பதிவு எழுச்சியுன், அமையாக நடைபெற்றது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


