டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சலுகைக் கட்டணத்தில் ஏர்ஏஷியாவுடன் ஓர் உலகச் சுற்றுலா!

சுற்றுலா தேதிகளை முன்னரே திட்டமிடுவதால், குறைந்த விலையில் விமானப் பயணச் சீட்டுகளை ஏர் ஏஷியாவில் நீங்கள் முன்பதிவு செய்துவிட முடியும்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:19 am

உமா ஷக்தி.

உங்கள் கனவுப் பிரதேசம் எதுவாக இருந்தாலும் அதை நோக்கி நீங்கள் செல்ல விரும்புகிறீர்களா? பரந்து விரிந்த கடல், அற்புதமான உணவு, காக்டெயில் பார்ட்டிகள் இன்னும் இன்னும் என உங்கள் மனம் ஆசைப்படும் அத்தனை விஷயங்களை அனுபவிக்க விரும்புகிறீர்களா? பயணத்தின் வசீகரக் குரல் உங்களை அழைக்க ஆரம்பித்துவிட்டது என்றுதான் இதற்கு அர்த்தம். விடுமுறையை மகிழ்வுடன் கழிக்க சுற்றுலாவுக்குப் போக திட்டமிடத் தொடங்குவதன் அதற்கான முதல் படி. காலண்டரை திறந்து, உங்களுக்கு ஏற்ற தேதிகளையும் அதற்குண்டான செலவையும் கணக்கெடுக்கத் தொடங்கிவிட்டீர்களா? நிற்க.

Story image

இந்த இடத்தில் தான் ஏர் ஏஷியாவின் பங்களிப்பு உங்களுக்கு உதவக் கூடும். நீங்கள் எந்த அளவுக்கு முன் கூட்டியே உங்கள் பயணத்தை தீர்மானித்து அதற்கேற்றபடி சீக்கிரம் திட்டமிடுகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சுற்றுலா திட்டுமிடுதலில் விற்பன்னர் ஆகிறீர்கள். நல்லது. உங்களுடன் கைகோர்த்து ஏர் ஏஷியா உங்களுக்காக சலுகை விலையில் விமானக் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது என்ற செய்தி உங்கள் மனத்தை குளிரச் செய்கிறது என்பதை அறிகிறோம். ஆமாம் சுற்றுலா தேதிகளை முன்னரே திட்டமிடுவதால், குறைந்த விலையில் விமானப் பயணச் சீட்டுகளை ஏர் ஏஷியாவில் நீங்கள் முன்பதிவு செய்துவிட முடியும். அவ்வகையில் அந்தப் பயணத்தை வெகு சிறப்பாக உங்கள் மனம் விரும்பும் வகையில் கொண்டாடித் தீர்க்க முடியும்!

ஏர் ஏஷியாவைப் பொருத்தவரையில் உலகின் மிக குறைவான விமானக் கட்டணங்களை உடைய ஏர் சர்வீஸ் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஏர் ஏஷியா 50 சதவிகிதம் வரை குறைவாக விமான கட்டணங்களை நிர்ணயித்து சுற்றுலா விரும்பிகளின் நேசத்துக்குரிய ஏர் சர்வீஸாக விளங்குகிறது. மார்ச் 20 2107 முதல் 2 ஏப்ரல் 2017 வரை மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பயணிக்க ஏர் ஏஷியா சலுகை விலைகளை அளிக்க முடிவு செய்துள்ளது.

Story image

நீங்கள் கடற்கரையை விரும்புவராக இருக்கலாம், சாகசங்களை நம்புவராக இருக்கலாம், அல்லது இயற்கையை நேசிப்பவராக இருக்கலாம் – ஏர் ஏஷியாவில் உங்களுக்கெனவே 50 சதவிகிதம் மிகக் குறைந்த விலையில் உங்கள் மனம் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். தயாராகிவிட்டீர்களா? இதோ எங்கள் முத்தான பயண திட்டங்களைப் படித்துப் பாருங்கள்.

லெய்ட் பேக் பயணம் (Laid-Back Holiday Destinations)

சில நாட்கள் ஒரு ஊரில் தங்கி அதே இடத்தில் மொத்தமாக உங்கள் விடுமுறையைக் கொண்டாட விரும்பிவிட்டீர்கள் எனில் அதற்கு இந்தோனேஷியாதான் ஏற்ற இடம் எனலாம். இந்தோனேஷியாவில் தவுசண்ட் ஐலண்ட்ஸ் (Thousand Islands), டிகேஐ ஜகார்தா (DKI Jakarta), கிலி தீவுகள் (Gili Islands) என சுற்றிக் களிக்க நிறைய இடங்கள் இந்தோனேஷியாவில் உள்ளது. இந்த இடங்களுக்குச் செல்லும் போது முற்றிலும் புத்துணர்வு பெறுவீர்கள். நிம்மதியும் சந்தோஷமும் தரும் அற்புத அனுபவமாக அது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பேக் பாக்கிங் பயணம் (Backpacking Destinations )

சுற்றுலா விரும்பியான நீங்கள் திடீரென முடிவெடுத்துப் பையைத் தூக்கிக் கொண்டு அப்படியே ஒரு பயணத்துக்கு கிளம்பிவிட்டீர்களா? அதுவும் சரி. வியட்நாமில் இருக்கும் ஹோ சி மின்ச் நகரம், பிலிப்பைன்சிலுள்ள மணிலா, சிட்னியிலுள்ள ப்ளூ மவுண்டன், கவுஹாத்தியிலுள்ள நிலப்பகுதிகள் என எல்லா இடங்களும் உங்களுக்கானது தான். ஏர்ஏஷியா அளிக்கும் 50 சதவிகிதம் குறைவான விமானக் கட்டணம் உங்கள் சுற்றுலா கனவுகளை மீட்டெடுக்க நிச்சயம் உதவும். 

Story image

குடும்பத்துடன் விடுமுறை பயணம் (Family Holiday Destinations)

உங்கள் குடும்பத்துடன் விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்ல ஆகச் சிறந்த இடம் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் தான். எல்லா வயதினரையும் கவர்ந்துவிடும் இடங்கள் இவை. நம் பிரியத்துக்குரியவர்களுடன் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நகர கலாச்சாரத்தை ரசித்தபடி அந்த ஊர்களின் சாலைகளில் நடப்பது என்பது ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்.  வெகு நாட்கள் உங்கள் நினைவுகளை விட்டு நீங்காமல் இருக்கும்.

தேனிலவு பயணங்கள் (Honeymoon Destinations )

தேனிலவுக்கு எங்கே போகலாம். வாழ்விலே ஒரு முறை எனவே அதைத் தீர்மானிப்பது என்பது ஜாலியான ஒரு விஷயம். அதிக செலவும் செய்யாமல் அதே சமயம் காதலும் ரசனையுமாக நாட்களை றெக்கை கட்டிப் பறக்க வைக்க மிகச் சரியான இடங்களைத் தேர்வு செய்ய ஏர் ஏஷியாவையே நாடுங்கள். காரணம் உங்களுக்கு இங்கே தான் 50 சதவிகிதம் வரை சலுகைக் கட்டணம் கிடைக்கும். ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட், இந்தோனேஷியாவில் லம்போக், கோவாவின் கடற்கரை என எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சியுடன் உங்கள் புதுத் துணையுடன் பறந்து மகிழலாம்.

இத்தகைய வகை வகையான ப்ளான்களில் விதவிதமான பயணங்களை மிகுந்த குறைவான கட்டணத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கவும், மேலதிக விபரங்களை பெறுவதற்கும் எங்கள் www.airasia.com என்ற இணையதளத்துக்கு வாருங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் எதுவாக இருந்தாலும் அது ஏர் ஏஷியாவின் மூலம் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் உத்திரவாதம் என்பதில் சந்தேகமில்லை.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். எங்கு செல்ல முடிவெடுத்தால் உடனடியாக முன் கூட்டியே பதிவு செய்துவிடுங்கள். உலகின் மிகக் குறைவான விமான சர்வீஸான ஏர் ஏஷியாவில் ஆஸ்திரேலியா மற்றும் ஏஷியா செல்ல 20 மார்ச் 2017லிருந்து 2 ஏப்ரல் 2017 வரை புக் செய்வதால் நீங்கள் அடையப் போகும் பலன்களை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது, அனுபவித்துத் தான் புரிந்து கொள்ள முடியும். ஆகவே முந்துங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.