திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நைட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்த மெர்சிடஸ் பென்ஸ்!

மெர்சிடஸ் பென்ஸின் புதிய எடிஜன் அறிமுகம் பற்றி..

News image

மெர்சிடஸ் பென்ஸ் - x.com

Updated On :28 மே 2026, 4:02 pm IST

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் புதிதாக ஜி.எல்.இ., மற்றும் ஜி.எல்.எஸ்., நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆடம்பர கார் வகைகளில் ஒன்றான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய பதிவான ஜி.எல்.இ., மற்றும் ஜி.எல்.எஸ்., நைட் எடிஷனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஷோரூம் விலையில் ஜிஎல்இ நைட் எடிஷன் ரூ. 1.05 கோடியாகவும், ஜிஎல்எஸ் நைட் எடிஷன் ரூ. 1.41 கோடியாகவும் நிர்ணயம் செய்துள்ளது. நைட் எடிஷன் ரக எஸ்யுவிக்கள் உள்புறத்திலும் வெளிப்புறத்திலும் அடர் கருப்பு நிறத் தோற்றத்தையும், அதனுடன் சில புதிய உபகரணங்களையும் கொண்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன.

ஜிஎல்இ நைட் எடிஷன் டீசல் மாடலானது அதன் வழக்கமான டீசல் வகையைவிட ரூ. 5லட்சம் கூடுதல் விலையாகும். அதேவேளையில், பெட்ரோல் வகையின் விலை ரூ. 3.50 லட்சம் அதிகமாக உள்ளது. ஜிஎல்எஸ் நைட் எடிஷனை பொறுத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள் வழக்கமான மாடல்களை விட ரூ. 3.50 லட்சம் மற்றும் ரூ. 3.30 லட்சம் கூடுதல் விலையில் கிடைக்கின்றன.

சிறப்பம்சங்கள் என்ன?

மெர்சிடஸ் புதிய மாடலில் ஆல்பைன் கிரே மற்றும் அப்டிசயைடன டிபளபடக என இரண்டு புதிய பிரத்யேக நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கருமையாக்கப்பட்ட பக்கவாட்டுக் கண்ணாடிகள், பம்பர்களில் பளபளப்பான கருப்பு நிற அலங்காரப் பட்டைகள் மற்றும் பிளாக் ரூப் ஆகியவை உள்ளன.

இன்டீரியரில் பிளாக் லெதர் சீட்கள், ஹெட்அப் டிஸ்பிளே போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஜிஎல்எஸ் நைட் எடிஷன் மாடலில் பின்புறம் என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஜிஎல்இ நைட் எடிஷனில் முதல்முறையாக 4 சிலிண்டர் என்ஜினுடன் ஏர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கின்றன. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 4 மேடிக் ஆல் வீல் டிரைவ் ஆகியவை இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ளது.

Summary

Mercedes-Benz has introduced the new GLE and GLS Night Editions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.