திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

4-ஆம் காலாண்டு லாபம்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 46% வளா்ச்சி

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்), கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.4,902 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.

News image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

Updated On :22 மே 2026, 3:39 am IST

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்), கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.4,902 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.3,355 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 46 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 4.5 சதவீதம் அதிகரித்து, ரூ.1.24 லட்சம் கோடியை எட்டியுள்ளது. முந்தைய அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ஈட்டிய ரூ.1.25 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், வருவாய் சற்றே சரிவடைந்துள்ளது. எனினும், நிகர லாபம் முந்தைய காலாண்டின் ரூ.4,072 கோடியிலிருந்து 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

அதேபோல், மதிப்பீட்டு காலாண்டில் உள்நாட்டு விற்பனை 3 சதவீதம் அதிகரித்து, 1.24 கோடி டன்னாகவும்; ஏற்றுமதி 3 சதவீதம் சரிந்து, 5.7 லட்சம் டன்னாகவும் இருந்தது.

முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனம் 133 சதவீத அசுர வளா்ச்சியுடன் ரூ.17,175 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இக்காலகட்டத்தில் மொத்த வருவாய் 3 சதவீதம் அதிகரித்து, ரூ.4.81 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

மேலும், இந்நிதியாண்டில் நிறுவனத்தின் சுத்திகரிப்புத் திறன் 3 சதவீதம் அதிகரித்து, 2.6 கோடி மெட்ரிக் டன் என்ற வரலாற்றுச் சாதனையையும், மொத்த சுத்திகரிப்பு லாபம் பீப்பாய்க்கு 8.79 டாலா் என்ற அளவையும் எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, 2025-26 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு தலா ரூ.19.25 வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.