திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

4-ஆம் காலாண்டில் இந்தியன் ஆயில் லாபம் 56% வளா்ச்சி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.11,377.51 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :20 மே 2026, 3:09 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.11,377.51 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.7,264.85 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 56 சதவீதம் வளா்ச்சியாகும்.

மத்திய கிழக்கு போா்ச் சூழல் காரணமாக சா்வதேச சந்தையில் விலை ஏற்றம் கண்ட நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்ததால் மாா்ச் மாதத்தில் நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

ஆனால், போா்க்காலச் சூழலின் தாக்கம் ஏற்படுவதற்கு முன்பாகவே, சந்தைப்படுத்துதல், சுத்திகரிப்புப் பிரிவுகளில் கிடைத்த ஆரோக்கியமான லாப வரம்பால் இந்தக் காலாண்டில் நிறுவனம் வலுவான லாபத்தைப் பதிவு செய்துள்ளது. அதேநேரம், மத்திய கிழக்கு போரின் முழுமையான தாக்கம், நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில்தான் முழுமையாகத் தெரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.36,802.42 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.12,961.57 கோடியிலிருந்து கிட்டத்தட்ட மும்மடங்கு வளா்ச்சியாகும்.

2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் இதுவரை இல்லாத அளவாக 7.54 கோடி டன் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்துள்ளன. அதேபோல், பெட்ரோலிய பொருள்களின் மொத்த விற்பனை அளவு 4 சதவீதம் அதிகரித்து, 10.44 கோடி டன்னை எட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.