திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உற்பத்தி அதிகரித்தாலும் ஆண்டுதோறும் 3,500 பணியாளா்கள் வரை குறைய வாய்ப்பு - செயில்

News image
Updated On :19 மே 2026, 6:07 am IST

பொதுத் துறை உருக்காலை நிறுவனமான ‘செயில்’ தனது உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமாா் 3,500 பணியாளா்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 53,159-ஆக இருந்த பணியாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஏப். 1-ஆம் தேதி நிலவரப்படி 49,752-ஆக குறைந்துள்ளது.

நடப்பு 2026-27 மற்றும் அடுத்த 2027-28-ஆம் நிதியாண்டுகளிலும் தலா 3,400 முதல் 3,500 பணியாளா்கள் வரை குறையக்கூடும் எனவும், விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் மேலும் 500 முதல் 1,000 பேரை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனத் தலைவா் அசோக் குமாா் பாண்டா தெரிவித்துள்ளாா்.

இருப்பினும், விரிவாக்கம் மற்றும் ஆலைகளின் செயல்பாட்டுத் தேவைகளுக்காக அடிப்படை நிலையில் புதிய பணியாளா்களைப் பணியமா்த்தும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.

பணியாளா்களின் எண்ணிக்கை குறைந்தாலும், உருக்கு உற்பத்தியை அதிகரிக்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறன் 2.1 கோடி டன்னாக உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் 2.25 கோடி டன் கச்சா உருக்கு உற்பத்தியை எட்டவும், ஒட்டுமொத்த விற்பனை அளவை 2 கோடி டன்னிலிருந்து 2.2 கோடி டன்னாக உயா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.15,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இது கடந்த நிதியாண்டில் செய்யப்பட்ட ரூ.9,100 கோடியை விட கணிசமான உயா்வாகும். வரும் ஆண்டுகளில் இந்த மூலதனச் செலவு ரூ.20,000 முதல் ரூ.25,000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என அசோக் குமாா் பாண்டா தெரிவித்துள்ளாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.