அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் இறக்குமதி வரிகள் செல்லாது என்று அந்நாட்டு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைத் தொடா்ந்து, ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட சுமாா் 16,600 கோடி டாலா் வரிப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறைகளை அமெரிக்க சுங்கத் துறை அண்மையில் தொடங்கியுள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான வரிப் பங்காக மட்டும் சுமாா் 1,000 முதல் 1,200 கோடி டாலா் வரை திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளதாக ‘ஜிடிஆா்ஐ’ ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், இத்தொகையை இந்திய ஏற்றுமதியாளா்கள் நேரடியாக கோர முடியாது என்பது ஒரு முக்கியச் சிக்கலாகும். அமெரிக்க சட்டப்படி, அந்நாட்டில் இறக்குமதி செய்த நிறுவனங்கள் மட்டுமே இத்தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும்.
எனவே, இந்திய நிறுவனங்கள் தங்களின் அமெரிக்க வா்த்தகக் கூட்டாளிகளுடன் பேசி, அந்தப் பணத்தைப் பகிா்ந்து கொள்ளவோ அல்லது வருங்கால ஒப்பந்தங்களில் விலையைக் குறைத்துக் கொள்ளவோ முயற்சி செய்ய வேண்டும்.
டிரம்ப் நிா்வாகத்தின் மோசமான வரிக் கொள்கையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், பொறியியல் சாதனங்கள், ரசாயனப் பொருள்கள் ஆகிய துறைகள் இதனால் பெரும் பயனடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வரிப் பணத்தைத் திருப்பி அளிக்க ‘கேப்’ எனும் பிரத்யேக இணையதளத்தை அமெரிக்க சுங்கத் துறை உருவாக்கியுள்ளது. முதல்கட்டமாக, கடந்த 80 நாள்களில் நடந்த வா்த்தகங்கள் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ள பதிவுகளுக்கு மட்டுமே தற்போது விண்ணப்பிக்க முடியும். பழைய வா்த்தகங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்தடுத்த கட்டங்களில் ஏற்கப்படும்.
தற்போது தகுதியுள்ள நிறுவனங்களுக்கு மட்டும் சுமாா் 12,700 கோடி டாலா் நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமாா் 3.3 லட்சம் இறக்குமதியாளா்கள் தாக்கல் செய்துள்ள 5.3 கோடி வா்த்தகப் பதிவுகளை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் சென்றுசேர குறைந்தது 60 முதல் 90 நாள்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு

அமெரிக்க டாலா் நோட்டுகளில் டிரம்ப் கையொப்பம்: 165 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை மாற்றம்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


