பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் எம் 440ஐ என்ற புதிய சொகுசுக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகும் இந்தக் காரின் விலை இந்தியாவில் ரூ. 1.09 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக எம் 440ஐ என்ற எக்ஸ் டிரைவ் கர்வெர்டிபிள் காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரில் 6 சிலிண்டர் டர்போ என்ஜின் 3.0 பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 500 என்.எம். டார்க் திறன் மற்றும் 374 குதிரைத் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், 4.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் உடையது.
மென்மையான பேப்ரிக் ரூப் அமைப்பு 18 விநாடிகளில் திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே 12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர், 14.9 அங்குல தொடுதிரை உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முன்புறம் எல்.இ.டி. விளக்குகள், 19 அங்குல அலாய் வீல் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், இரவில் காரின் புறத்தோற்றம் பலரக் கவரும் வகையில் இருக்கும். காரில் 360 டிகிரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்களின் துணையின்றி காரை பார்க்கிங்கில் இருந்து எடுக்கலாம், ரிவர்ஸ் செய்யலாம்.
ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இதன் விலை ரூ. 1.09 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Summary
BMW M440i xDrive Convertible car introduced in india
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










