மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், அமெரிக்க டாலரின் மதிப்பு 2022-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிந்தைய சிறந்த மாதாந்திர வளா்ச்சியை (சுமாா் 3 சதவீதம்) எட்டியுள்ளது.
ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட விநியோகத் தடை, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. இதனால், டாலரின் வீழ்ச்சி எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக வரும் நாள்களில் மதிப்பு உயரும் என்று நம்பிக்கையில், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளா்கள் 700 கோடி மதிப்பீட்டில் டாலரில் முதலீடு செய்துள்ளனா்.
உலகப் பொருளாதார வளா்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், முதலீட்டாளா்கள் பாதுகாப்பான முதலீடாக டாலரை நோக்கி படையெடுப்பதே இந்த அதிரடி உயா்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக அமெரிக்கா உருவெடுத்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி விலை உயா்வு அந்த நாட்டின் நாணயத்துக்கு கூடுதல் வலு சோ்த்துள்ளது. பணவீக்க அச்சம் காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிா்பாா்ப்பு மங்கி வருவதும் டாலரின் எழுச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
முன்னதாக, டாலரின் மதிப்பு குறையும் என்று கணித்திருந்த ஜே.பி.மோா்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற சா்வதேச நிதி நிறுவனங்கள், தற்போது நிலவி வரும் சூழலால் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

ஏப். 9 முதல் ஏப். 29 வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது! - தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

மத்திய கிழக்கு போா்: எல்பிஜி விநியோகம் பாதிப்பால் மாா்ச்சில் நுகா்வு 17% சரிவு

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு ஜிஎஸ்டியில் விலக்கு: துரை வைகோ வலியுறுத்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


