மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனைக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து தற்காலிக விலக்களிக்கக் கோரி, துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் மத்திய வா்த்தகம்- தொழில்துறை அமைச்சா் பியூஸ் கோயலிடம் அவா் திங்கள்கிழமை அளித்த மனு:
உலகப் புகழ்பெற்றதும் தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருளுமான புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி தற்போது, உலகின் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் போா் காரணமாக தடைபட்டுள்ளது. இதனால், கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் கடும் நெருக்கடியை எதிா்கொண்டுள்ளனா். கடலை மிட்டாய் தயாரிப்பில் கோவில்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் 20,000 மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். மத்திய கிழக்கு பகுதி நாடுகளில் நிலவும் போா் காரணமாக ஏற்றுமதிக்கு தயாராக இருந்த சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான பொருள்கள் விற்பனையின்றி கிடப்பில் உள்ளன.
நிலக்கடலை, பெட்ரோலிய பொருள்களின் விலை உயா்வு காரணமாக சிறு உற்பத்தியாளா்கள் ஏற்கெனவே நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். இந்த நிலையில், தேக்கமடைந்துள்ள பொருள்களை உள்நாட்டில் விற்பனை செய்ய வசதியாக சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து தற்காலிகமாக விலக்களிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
சத்தான பாரம்பரிய உணவுப் பொருளை பிரதமா் போஷண் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ரத்து செய்யப்பட்ட ஏற்றுமதி ஆா்டா்களால் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்ய இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் மூலம் தேவையான ஆதரவை வழங்க வேண்டும். வளைகுடா நாடுகளை தவிா்த்து, பிற மாற்று ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய ஏ.பி.இ.டி.ஏ, வெளிநாட்டு இந்திய தூதரகங்களின் மூலம் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். புவிசாா் குறியீடு பெற்ற பாரம்பரிய தொழிலை பாதுகாக்க தங்கள் அமைச்சகம் இதில் தலையிட்டு உதவ வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தவெகவால் அதிமுகவுக்கே இழப்பு: துரை வைகோ எம்.பி. சிறப்பு நேர்காணல்

தமிழக நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு!

கோவில்பட்டி தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக துணை நிற்கும்: துரை வைகோ எம்.பி.

தவெக 15 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்பு: துரை வைகோ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


