டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை இதுவரை இல்லாத குறைந்த அளவான ரூ. 94.15 -ஐ எட்டியது.
புதன்கிழமை முடிவில் 93.97 ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை பொது விடுமுறை காரணமாக மாற்றமின்றி இருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியவுடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.15 என்ற அளவில் இருந்தது.
காலை 10.45 மணி நிலவரப்படி, இந்திய நாணயம் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ. 94.27 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய நாணயம் வீழ்ச்சி அடைந்ததுடன், அரசின் 10 ஆண்டுப் பத்திர வருவாயும் புதன்கிழமை வர்த்தக முடிவில் 6.86 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 6.94 சதவிதத்தை எட்டியுள்ளது. 7 சதவிகிதத்தை நெருங்கி வருகிறது.
மேற்கு ஆசிய போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட வெளிநாட்டு நிதி வெளியேற்றம், இந்திய ரூபாயின் சரிவுக்கு முக்கிய காரணமாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
Summary
The Indian rupee has crossed Rs 94 against the dollar! An unprecedented fall!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.23 ஆக உயர்வு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு 92.81 ஆக உயர்வு! 12 ஆண்டுகளில் இல்லாத எழுச்சி! எப்படி?

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொடர் வீழ்ச்சி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



