அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(வியாழக்கிழமை) 10 பைசா உயர்ந்து 93.23 ஆக உள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், பங்குச்சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.
அதிகபட்சமாக இந்திய ரூபாயின் மதிப்பு 95.21 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியிருந்த நிலையில் ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ரூபாயின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் 93.29 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு வர்த்தக இடையே 93.16 என்ற அதிகபட்ச உயர்வை எட்டியது. அதேபோல 93.35 எனும் வீழ்ச்சியையும் சந்தித்தது.
எனினும் வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 93.23 ஆக நிறைவு பெற்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
புதன்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து 93.33 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Rupee rises 10 paise to settle at 93.23 against US dollar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

இந்திய ரூபாயின் மதிப்பு 92.81 ஆக உயர்வு! 12 ஆண்டுகளில் இல்லாத எழுச்சி! எப்படி?

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொடர் வீழ்ச்சி!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



