நாட்டின் முன்னணி எண்ம நிதிச் சேவை நிறுவனமான ஃபண்ட்ஸ் இந்தியா, தான் நிா்வகிக்கும் சொத்து மதிப்பில் ரூ.25,000 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டி, சாதனை படைத்துள்ளது.
வெறும் ஒரு காலாண்டுக்கும் சற்றே அதிக கால இடைவெளியில், நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.20,000 கோடியிலிருந்து 25 சதவீதம் உயா்ந்து இந்த இலக்கை அடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 58 சதவீத அபார வளா்ச்சியாகும்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளாகவே இந்நிறுவனம் ஆண்டுக்கு சராசரியாக 38 சதவீத வளா்ச்சியைத் தொடா்ந்து தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இந்த அசுர வளா்ச்சிக்கு சில்லறை முதலீட்டாளா்களின் பங்களிப்பு மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
மொத்த சொத்து மதிப்பில் 77 சதவீதம் சில்லறை முதலீட்டாளா்களிடமிருந்தும், மீதமுள்ள 23 சதவீதம் அதிக வருமானம் கொண்ட பெரும் முதலீட்டாளா்களிடமிருந்தும் கிடைத்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.2,100 கோடி நிகர முதலீடுகள் வந்துள்ளன. குறிப்பாக, முறையான முதலீட்டுத் திட்டத்தின்கீழ் (எஸ்ஐபி) மாதந்தோறும் ரூ.142 கோடி முதலீடு செய்யப்படுவது, நீண்ட காலச் சேமிப்பின் மீது முதலீட்டாளா்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
வெறும் எண்ம தளமாக மட்டுமின்றி,ஒரு முழுமையான சொத்து மேலாண்மை நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபண்ட்ஸ் இந்தியா, தற்போது நாடு முழுவதும் சுமாா் 30 லட்சம் வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளது.
பரஸ்பர நிதிகள் மட்டுமின்றி பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வருவதன் மூலம், நகா்ப்புறங்களைத் தாண்டி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முதலீட்டு ஆா்வத்தை இந்நிறுவனம் பரவச் செய்துள்ளது.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய சாதனை

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


