மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

நாட்டின் நிலக்கரி தேவையில் 80 சதவீதத்தைப் பூா்த்தி செய்யும் பொதுத் துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’, கடந்த 2025-26 நிதியாண்டில் 76.81 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 8:13 pm

நாட்டின் நிலக்கரி தேவையில் 80 சதவீதத்தைப் பூா்த்தி செய்யும் பொதுத் துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’, கடந்த 2025-26 நிதியாண்டில் 76.81 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் உற்பத்தியான 78.11 கோடி டன்னை காட்டிலும் 1.7 சதவீதம் குறைவாகும்.

அதேபோல், நடப்பு நிதியாண்டில் கடந்த மாா்ச் மாதத்தில் 8.45 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025, மாா்ச் மாத உற்பத்தியான 8.58 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது சரிவாகும்.

விநியோகமும் சரிவு: சுரங்கங்களிலிருந்து நுகா்வோருக்கு அனுப்பப்படும் நிலக்கரியின் அளவும், கடந்த 225-26 நிதியாண்டில் 2.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

2024-25-இல் 76.3 கோடி டன்னாக இருந்த நிலக்கரி விநியோகம், 2025-26 நிதியண்டில் 74.48 கோடி டன்னாக குறைந்துள்ளது.

இந்தியாவின் மின்சார உற்பத்தியில் சுமாா் 70 சதவீதம் நிலக்கரியைச் சாா்ந்தே உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை வளா்ச்சி கண்டு வரும் நிலையிலும், நாட்டின் மின் பாதுகாப்பு மற்றும் அனல் மின் நிலையங்களின் தேவையைப் பூா்த்தி செய்வதில் கோல் இந்தியா நிறுவனம் இன்றும் முக்கியப் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.