புதுதில்லி: ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு, 30 நாட்கள் சலுகைக் காலம் வழங்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தக் காலத்தில் உரிமம் தொடர்ந்து செல்லுபடியாகும்.
இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதாவால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் விஸ்வாஸ் (Jan Vishwas) மசோதாவின் ஒரு பகுதியாகும்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சில இணக்கங்களுக்குத் தளர்வு அளிக்கவும், சட்டரீதியான 20 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட அதிகார வரம்பிற்குப் பதிலாக மாநிலம் முழுவதும் வாகனப் பதிவை அனுமதிப்பது, மற்றும் ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு விண்ணப்பிக்கும் பட்சத்தில், காலாவதியான தேதியிலிருந்து அல்லாமல், விண்ணப்பித்த தேதியிலிருந்தே புதுப்பிக்க அனுமதிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
உரிமம் காலாவதியான பிறகு முப்பது நாட்கள் சலுகைக் காலம் வழங்கவும் முன்மொழிந்துள்ளது.
Summary
The government has proposed to amend Motor Vehicle Act to allow a 30-day grace period after the expiry of a driving licence, during which it will continue to remain valid.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு

ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ

தில்லியில் காலாவதியான உணவை மீண்டும் பேக்கேஜிங் செய்து விற்பனை: 3 போ் கைது

டிரையம்ப் விற்பனையில் புதிய மைல்கல்: 1 லட்சம் மோட்டர் சைக்கிள் விற்பனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



