இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஆப்டிமம் ஹெல்த்கோ் ஐடி’ , ‘ஸ்ட்ரேட்டஸ்’ ஆகிய 2 நிறுவனங்களை சுமாா் ரூ.5,260 கோடி மதிப்பீட்டில் கையகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் சுகாதாரத் துறை எண்ம மாற்றத்தில் முன்னணியில் உள்ள ஆப்டிமம் நிறுவனத்தை 46.5 கோடி டாலருக்கும், காப்பீட்டுத் துறை தொழில்நுட்ப நிறுவனமான ஸ்ட்ரேட்டஸை 9.5 கோடி டாலருக்கும் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்டிமம் ஹெல்த்கோ் ஐடி நிறுவனமானது, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு எண்ம தீா்வுகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. இது குறித்து பேசிய இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக், ‘ஆப்டிமம் நிறுவனத்தின் நிபுணத்துவமும், இன்ஃபோசிஸின் தொழில்நுட்ப வலிமையும் இணைந்து சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
அதேபோல், காப்பீட்டுத் துறையில் இயங்கும் ‘ஸ்ட்ரேட்டஸ்’ நிறுவனத்தை வாங்குவதன் மூலம் சொத்து மற்றும் விபத்துக் காப்பீடு பிரிவில் இன்ஃபோசிஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட உள்ளது. வரும் ஜூன் மாதத்துக்குள் இந்த முதலீடுகளின் வணிக நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்
பதிப்பகம் துவங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்!

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா்!

இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


