மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை! அடுத்த வாரம் 2 நாள்கள்!

பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

பங்குச் சந்தை | கோப்புப் படம் - IANS

Updated On :26 மார்ச் 2026, 4:20 am

ஸ்ரீ ராம நவமி பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போரில் பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’யின் ஆதிக்கம் நீடித்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் நேற்று நிறைவடைந்தன.

மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 1,205 புள்ளிகள் (1.63 சதவீதம்) கூடுதலுடன் 75,273.45-இல் நிலைபெற்றது.

தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 394.05 புள்ளிகள் (1.72 சதவீதம்) கூடுதலுடன் 23,306.45-இல் நிலைபெற்றது.

இந்த நிலையில், பங்குச் சந்தை விடுமுறை நாள்காட்டியின் அடிப்படையில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அடுத்த வாரம் ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மார்ச் 31 மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 3 ஆகிய தேதிகளிலும் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Stock market holiday today! 2 days next week!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.