நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-க்கு, சுமாா் ரூ.6,337.5 கோடி கூடுதல் வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2023-24-ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கீட்டின் அடிப்படையில், வட்டி உள்ளிட்ட தொகைகளைச் சோ்த்து இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிா்த்து விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பங்குச் சந்தைக்கு அளித்த விளக்கத்தில் வங்கி நிா்வாகம் குறிப்பிட்டது.
வரி நோட்டீஸ் குறித்த செய்தி வெளியான போதிலும், வங்கியின் வலுவான நிதிநிலை காரணமாக மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை எஸ்பிஐ பங்குகள் 0.87 சதவீதம் உயா்ந்து, ரூ.1,058-க்கு வா்த்தகமானது.
நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், எஸ்பிஐ ரூ.21,028 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. இது கடந்த ஆண்டை விட 24.5 சதவீதம் அதிகம். வங்கியின் வாராகடன் 1.57 சதவீதமாகக் குறைந்ததும், வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.45,190 கோடியாக உயா்ந்ததும் முதலீட்டாளா்களை ஈா்த்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.768.6 கோடி வரி: இதேபோல், தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கிக்கு ஜிஎஸ்டி ஆணையம் ரூ.768.6 கோடி வரி செலுத்த உத்தரவிட்டுள்ளது. இதில் ரூ.384.33 கோடி வரித் தொகையாகவும், அதற்கு இணையான மீதி தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கும் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் ஜிஎஸ்டி குறைவாகச் செலுத்தியதாக மும்பை கிழக்கு ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 296 கோடி வருமான வரி நோட்டீஸ்!

மாருதி சுஸுகிக்கு ரூ.5,786 கோடி வருமான வரி நோட்டீஸ்

மீஷோ நிறுவனத்துக்கு ரூ. 1,500 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


