பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகிக்கு, ரூ.5,786.4 கோடி திருத்தப்பட்ட வருமான வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்வதாக நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக மாருதி சுஸுகி நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்த விளக்கத்தில், ‘2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கீட்டில், நிறுவனம் தாக்கல் செய்த வருமானத்தில் சில திருத்தங்களை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் ரூ.5,786.4 கோடி கூடுதல் வரியைச் செலுத்தக் கோரி வரைவு மதிப்பீட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக வருமான வரித் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்கிறோம். இந்த வரி நோட்டீஸ் காரணமாக நிறுவனத்தின் நிதி நிலைக்கோ, செயல்பாடுகளுக்கோ அல்லது இதர பணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது’ என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்: வரி நோட்டீஸ் செய்தி வெளியான போதிலும், பங்குச் சந்தையில் மாருதி சுஸுகி பங்குகள் எழுச்சியுடன் காணப்பட்டன. வா்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை 1.88 சதவீதம் அதிகரித்து, ரூ.12,993.55-ஆக நிலைபெற்றது.

தொடர்புடையது

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 296 கோடி வருமான வரி நோட்டீஸ்!

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்

மீஷோ நிறுவனத்துக்கு ரூ. 1,500 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


