ஷாவ்மி நிறுவனத்தின் புதிய கையடக்கக் கணினி (டேப்லெட்) இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. கடந்த மாதம் சர்வதேச சந்தைகளில் அறிமுகமான நிலையில், இந்திய சந்தைக்கு ஏற்ற விலை மாற்றங்களுடன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான், எம்ஐ.காம் இணைய விற்பனை தளங்களிலும் ஷாவ்மி கிளைகளிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
வழக்கமான ஷாவ்மி பேட் 8 உடன், ஃபோகஸ் பென், ஃபோகஸ் கீபோர்டு ஆகிய இரண்டையும் ஷாவ்மி அறிமுகம் செய்துள்ளது.
8GB + 128GB நினைவகம் கொண்ட ஷாவ்மி பேட் 8 விலை ரூ. 33,999.
12GB + 256GB நினைவகம் கொண்ட ஷாவ்மி பேட் 8 விலை ரூ. 36,999.
இதே நினைவகத்துடன் நானோ புறவடிவமைப்பு கொண்ட ஷாவ்மி பேட் 8 விலை ரூ. 38,999.
ஷாவ்மி பேட் 8 சிறப்பம்சங்கள்
ஷாவ்மி பேட் 8 கையடக்கக் கணினிகள் கிராஃபைட் சாம்பல், டைட்டானியம் நீலம் என இரு வகை வண்ணங்களில் கிடைக்கின்றன.
11.2 அங்குல எல்.சி.டி. திரை கொண்டது. 3.2K ரெஷொல்யூசன் (3,200 x 2,136 pixels) உடையது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 800 nits திறன் உடையது.
4nm ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 8எஸ் நான்காம் தலைமுறை புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.
9,200mAh திறன் பேட்டரி உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் உடையது. 22.5W ரிவர்ஸ் சார்ஜ் அம்சமும் உள்ளது.
பின்பக்கம் 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4K திறனுடன் 30 fps திறனுடன் விடியோ பதிவாகும். முன்பக்கம் 8MP கேமரா உள்ளது.
வைஃபை 6, புளூடூத் 6.0, யுஎஸ்பி 3.2, போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
200% வரை ஒலி அளவை கூட்டிக்கொள்ள முடியும். டோல்பி ஒலித்திறன் உடையது.
Summary
Xiaomi has launched the Xiaomi Pad 8 in India with a 144Hz display, Snapdragon 8s Gen 4 chip
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

15 விநாடிகளில் கூலிங்! ஷாவ்மியில் அறிமுகமானது சப்தமில்லாத ஏசி!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

ஏப்ரல் 15-ல் அறிமுகமாகிறது ஷாவ்மி ஸ்மார்ட் டிவி! எஸ் மினி எல்இடி!

ஷாவ்மி 17, ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



