தமிழ்நாடு உணவகங்களில் இதுவரை சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவு விநியோகம் தடைபடவில்லை, ஆனால் இந்நிலை தொடருமானால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் வணிகப் பயன்பாடு சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நேற்றைய தினம் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக பிரதமருக்கும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளோம். எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்படும் நிலையை தடுக்க தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம்.
உணவகங்கள் அனைத்தையும் எஸ்மா சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் , அதற்கு மாநில அரசும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம். இதுவரை எந்த ஹோட்டல்களிலும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவுகளை சமைப்பதில் பாதிப்புகள் இல்லை.
ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் இதே நிலைத் தொடர்ந்தால் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும் என அவர் தெரிவித்தார், இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டினால் நிச்சயம் விலை ஏற்றம் இருக்காது, ஆனால் உணவகங்களை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் இதன் மூலம் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
வணிக நல வாரிய உறுப்பினர்களுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் பிரதமருக்கும் பெட்ரோலிய அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளோம் என்று அப்போது விக்கிரம ராஜா கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், வணிக நல வாரிய உறுப்பினர்களுக்கு பதிவிக்காலத்தை இரண்டு ஆண்டுகள் கூடுதலாக நீடித்ததற்காகவும், வாரிய உறுப்பினர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவதாக அறிவிப்பை வெளியிட்டதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டோம்.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் பாதிக்கப்படும் என்ற நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு சிறப்பு சட்டமாக எடுக்கப்பட்டு கட்டாயமாக தட்டுபாடு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் அவர்களுக்கும் பெட்ரோலியதுறை அமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கையை வைத்திருக்கிறோம். இது தொடர்பாக முதலமைச்சரையும் சந்தித்து உரையாடி உள்ளோம்,
அனைத்து ஹோட்டல்களிலும் அடுத்த இரண்டு நாள்களுக்கான சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்பு சிலிண்டர்கள் கிடைத்தால் மட்டுமே உணவகங்கள் சரியான முறையில் இயங்கும். தற்போது உணவகங்களில் உணவு பட்டியலை தான் குறைத்திருக்கிறார்ளே தவிர்த்து உணவு வழங்குவதை முற்றிலுமாக நிறுத்தவில்லை . எனவே இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

சிலிண்டர் தட்டுப்பாடு! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி இல்லை!

வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு: சூடு பிடிக்கும் விறகு விற்பனை; டன் ரூ.4,000 தாண்டியது

சிலிண்டர் தட்டுப்பாடு! சுவையிழக்குமா திருமண விருந்துகள்? கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


