ஈரான் போர் காரணமாக போதிய எரிபொருள் வரத்துக் குறைந்திருப்பதால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள், ஏற்கனவே பெற்ற திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கான விருந்துகளை எவ்வாறு தயார் செய்வது என்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றன.
ஒருவேளை, நிலைமை மோசமானால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படலாம், விருந்தினர்களின் அளவு குறைக்கப்படலாம் அல்லது நிகழ்ச்சிகள் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கேட்டரிங் நிறுவனங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
ஈரான் போர் காரணமாக எழுந்துள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டால், திருமண மண்டபங்களும், உணவுத் தயாரிப்பு நிறுவனங்களும் பெரும் சிக்கலில் தவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. சில உணவுத் தயாரிப்பாளர்கள் விறகு அடுப்பில் சமைக்கும் முறைக்கு மாறியிருக்கிறார்கள். ஆனால் போதிய வசதி இல்லாதவர்கள், உணவுப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாரக் கடைசி வரையிலேயே எங்களிடம் இருக்கும் சிலிண்டர்கள் போதுமானதான இருக்காது என்பதால் ஞாயிறு முதல் மார்ச் 28ஆம் தேதி வரை எங்களுக்கு வந்த திருமண ஆர்டர்களை ரத்து செய்திருப்பதாக மேற்கு மாம்பலத்தில் இயங்கி வரும் தனியார் உணவுத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த பிரச்னையை சரி செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்கிறார்கள்.
விறகு அடுப்புக்கு உடனடியாக மாறிவிடலாம் என்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, எங்கள் சமையல் நிபுணர்களுக்கு விறகு அடுப்பில் சமைத்து அனுபவமே இல்லை, எங்கள் சமையற்கூடம் எரிவாயு இணைப்புடன் கூறிய மிகப்பெரிய சமையற்கூடம். இதில் விறகு அடுப்பை பயன்படுத்தவே முடியாது என்கிறார்கள்.
முன்புவரை சிலிண்டர்களை கொடுக்க முன்வந்த திருமண மண்டபங்களும் அதிலிருந்து பின்வாங்குகின்றன. தற்போது திருமணத்துக்கு முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு சமையலறையே இல்லை என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதிகள் முகூர்த்த நாள்களாக இருப்பதால் அதுவரை நிலைமையை சமாளிக்கவே பலரும் முயன்று வருவதாகக் கூறுகிறார்கள்.
ஒரு சில நாள்களில் நிகழ்ச்சிகள் இருந்தால் அதனை ரத்து செய்யவோ, ஒத்திப்போடவோ முடியாது. விறகு அடுப்பை வைத்தாவது நிலைமையை சரி செய்துதான் ஆக வேண்டும் என்கிறார் பெரம்பூரில் உணவுத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் யுவராஜ்.
இதுபோல, அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தத்தை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர் கூறுகையில், திருமண அரங்கிலும், உணவக நிறுவனமும் திட்டமிட்டபடி நடத்திக் கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். ஆனால் சற்று அச்சமாகவே உள்ளது. நாங்கள் நூற்றுக்கணக்கானோரை அழைத்திருக்கிறோம். இப்போது நிகழ்ச்சியை ரத்து செய்வதோ, ஒத்திப்போடுவதோ பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
Summary
Catering companies are concerned about preparing wedding banquets due to the cylinder shortage.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலிண்டர் தட்டுப்பாடு! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி இல்லை!

வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு: சூடு பிடிக்கும் விறகு விற்பனை; டன் ரூ.4,000 தாண்டியது

சிலிண்டர் தட்டுப்பாடு! நெல்லையில் அல்வா தயாரிப்பு பாதிப்பு!

சிலிண்டர் தட்டுப்பாடு: விறகுகள் விலையும் அதிகரிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



