நாட்டின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது மொத்த விற்பனையில் 24 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 17,903 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதைவிட 24 சதவீதம் கூடுதலாக நடப்பு ஆண்டு பிப்ரவரியில் 22,157 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.
இந்தியச் சந்தையில் மட்டும் பிப்ரவரி மாத விற்பனை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 15,879 வாகனங்கள் விற்பனையான நிலையில், தற்போது அது 20,314-ஆக அதிகரித்துள்ளது.
கனரக, இலகுரக வாகனங்கள்: உள்நாட்டுச் சந்தையில் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களின் விற்பனை 31 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 10,110-ஆக இருந்த இந்த வாகனங்களின் விற்பனை, தற்போது 13,264-ஆக அதிகரித்துள்ளது. இலகு ரக வணிக வாகனங்களின் விற்பனை, கடந்த ஆண்டின் 5,769-லிருந்து தற்போது 7,050-ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 25% உயர்வு!

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி 2.3%: கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவால் பிப்ரவரியில் வீழ்ச்சி

பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் 3.21%

பஜாஜ் வாகன விற்பனை: பிப்ரவரியில் 27% வளா்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


