மும்பை: கடந்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனையான 4,14,687 இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில், மார்ச் 2026ல் மொத்த விற்பனை 25 சதவீதம் உயர்ந்து 5,19,358 வாகனங்களாக இருப்பதாக டிவிஎஸ் மோட்டார் இன்று அறிவித்தது.
உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 25 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. மார்ச் 2025ல் 2,97,622ஆக இருந்த விற்பனை, கடந்த மாதம் 3,72,383ஆக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனை 18% அதிகரித்து, மார்ச் 2025ல் 1,96,734ஆக இருந்தது, தற்போது இது 2,32,788ஆக உயர்ந்துள்ளது.
ஸ்கூட்டர் விற்பனை 31 சதவீதம் உயர்ந்து, கடந்த ஆண்டு 1,66,297ஆக இருந்தது. இதுவே மார்ச் 2026ல் 2,17,624ஆக இருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.
மின்சார வாகன விற்பனை, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 44 சதவீதம் உயர்ந்து, மார்ச் 2026ல் 38,877ஆக பதிவானது.
நிறுவனத்தின் சர்வதேச வணிக விற்பனை 1,41,443 வாகனங்களாக இருந்தது. இது மார்ச் 2025ல் பதிவான 1,13,464 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 25 சதவீத வளர்ச்சியைப் உறுதிப்படுத்தியது. இருசக்கர வாகன விற்பனை 23% வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, மார்ச் 2025ல் 1,02,498 வாகனங்களாக இருந்த விற்பனை, கடந்த மாதம் 1,25,751 வாகனங்களாக உயர்ந்துள்ளது.
2024-25 நிதியாண்டில் 47.44 லட்சம் வாகனங்களாக இருந்த விற்பனை, கடந்த ஆண்டு 58.89 லட்சம் வாகனங்களாக உயர்ந்து, 24 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை 46.09 லட்சத்திலிருந்து 23 சதவீதம் உயர்ந்து, 56.70 லட்சம் வாகனங்களாக உள்ளது.
கடந்த ஆண்டு மூன்று சக்கர வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 63 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.19 லட்சம் வாகனங்களாக உள்ளது.
மொத்த ஏற்றுமதிகள் 33 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது. இது 2024-25 நிதியாண்டில் 11.95 லட்சம் வாகனங்களாக இருந்த நிலையிலிருந்து 15.85 லட்சம் வாகனங்களாக உயர்ந்துள்ளது.
Summary
TVS Motor on Wednesday said its total sales surged 25 per cent to 5,19,358 units in March 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2026ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்த வாகன விற்பனை 2.83 கோடி: சியாம்

மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை 20% உயர்வு!

மார்ச்சில் உச்சம் தொட்ட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை!

மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி விற்பனை 16.72% உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



