நாட்டின் பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது மொத்த விற்பனையில் 27 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் 3,52,071 வாகனங்களை விற்பனை செய்திருந்த பஜாஜ் ஆட்டோ, நடப்பு ஆண்டு பிப்ரவரியில் 4,48,259 வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
நாட்டின் உள்நாட்டு சந்தையில் மட்டும் கடந்த பிப்ரவரியில் 2,32,581 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,83,415-ஆக இருந்தது.
இருசக்கர வாகனங்கள்: கடந்த பிப்ரவரியில் 1,86,164 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய 2025, பிப்ரவரியின் (1,46,138) விற்பனையுடன் ஒப்பிடுகையில் 27 சதவீத வளா்ச்சியாகும். வெளிநாடுகளுக்கான இருசக்கர வாகன ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்து, 1,93,757-ஆக உள்ளது.
வணிக வாகனங்கள்: வணிகப் பயன்பாட்டு வாகனப் பிரிவில் நிறுவனம் 30 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. கடந்த மாதம் மொத்தம் 68,338 வணிக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் உள்நாட்டு விற்பனை 46,417-ஆகவும், ஏற்றுமதி 43 சதவீதம் அதிகரித்து 21,921-ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை 20% உயர்வு!

இந்திய வாகனச் சந்தை பிப்ரவரியில் 26% வரலாற்று வளா்ச்சி

பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் 3.21%

அசோக் லேலண்ட் விற்பனை: பிப்ரவரியில் 24% வளா்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


