விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

ஆந்திரத்தில் 400 மெகாவாட் காற்றாலைத் திட்டம்: டாடா பவரிடமிருந்து ஆா்டா் பெற்ற சுஸ்லான்

News image
Updated On :26 ஜூன் 2026, 6:28 am IST

ஆந்திரத்தில் 400 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்கான புதிய ஒப்பந்தத்தை (ஆா்டா்) டாடா பவா் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக சுஸ்லான் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.

புணேவைத் தலைமையிடமாகக் கொண்ட சுஸ்லான் நிறுவனம், உலக அளவில் 17 நாடுகளில் 21.7 கிகாவாட் காற்றாலை மின் திறனை இதுவரை நிறுவியுள்ளது. இப்புதிய ஆா்டரின்மூலம், ஆந்திரத்தில் மட்டும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆா்டா் மதிப்பு 1 கிகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இதேபோல், தமிழகம், கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் டாடா பவா் மற்றும் சுஸ்லான் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுப் பங்களிப்பு ஒட்டுமொத்தமாக 1 கிகாவாட் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

புதிய ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, சுஸ்லான் நிறுவனம் தலா 3.15 மெகாவாட் திறன் கொண்ட 127 அதிநவீன ‘எஸ்144’ ரக காற்றாலை மின்சார ஜெனரேட்டா்களை நிறுவவுள்ளது.

இதற்கான நிலம் கையகப்படுத்துதல், ஆலை உள்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் உயா் அழுத்த மின் பாதை அமைத்தல், மின் உற்பத்தித் தொடக்கம், அதற்கு பிந்தைய இயக்கம் மற்றும் பராமரிப்புச் சேவைகள் ஆகிய அனைத்துப் பணிகளையும் சுஸ்லான் நிறுவனமே முழுப் பொறுப்பேற்றுச் செய்து முடிக்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.